கள்ளசாராய ஊறல் கண்டுபிடிப்பு; வனத்துறை அதிரடி

0
406

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்துள்ள வெள்ளாம்பிகை மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலகத்திற்க்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிய வனச்சரகர் கலையரசன் வனத்துறையினருடன்நேற்று (செப்.,12) சம்பந்தபட்ட இடத்திற்க்கு சென்று சோதனை செய்தார்கள்.

சோதனையில்  வெள்ளாம்பி பகுதியை சேர்ந்த ராமர் காணி (49) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்க்கான பொருட்கள் மற்றும் சாராய ஊறல்களும் ஒரு தள்ளுவண்டியினுடைய அடியில் ஒளித்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் பேரில் ராமர் காணிக்கு 25 ஆயிரம் ரூபாய்அபராதமும், இனி சாராயம் காய்ச்ச மாட்டேன் என்று மன்னிப்பு கடிதமும் வாங்கி வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here