Home 2024
Yearly Archives: 2024
சாலையில் தீப்பற்றி எரிந்த காரில் போலி ரூ.2000 நோட்டு கட்டுகள்: நாட்றாம்பள்ளி போலீஸார் தீவிர விசாரணை
நாட்றாம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், காரில் இருந்த போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தீயில் கருகின.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் அபி நரசிம்மன் (58). இவர், மேட்டூரில் இருந்து சென்னைக்கு நேற்று காரில் பயணித்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்தபையனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது கார்திடீரென தீப்பற்றியது. உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த நாட்றாம்பள்ளி போலீஸார்...
1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் என் தந்தையும் இருந்தார்: மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தகவல்
1984-ல் நடந்த ஏர் இந்தியா விமானக் கடத்தலின்போது எனதுதந்தையும் விமானத்தில் சிக்கியிருந்தார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர்24-ம் தேதி ‘ஐசி 814' என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்154 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் 5 தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டது. பின்னர். மசூத் அசார், உமர்ஷேக் மற்றும் முஷ்டாக்அகமது சர்கார் ஆகிய மூன்று தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானம் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து ‘கந்தஹார் விமானக்...
அமெரிக்கப் பயணம் முதல் அமைச்சரவை மாற்றம் வரை – தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் 29-ம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2-ம் தேதி சிகாகோ சென்றார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு...
அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.76 கோடியில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி
புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடி மதிப்பிலான அதிநவீன கருவியை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.2.76 கோடி மதிப்பிலான அதிநவீன கோபால்ட் புறக்கதிர்வீச்சு சிகிச்சை கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக ரத்தப் பரிசோதனை முடிவுகளை இணையதளம் மற்றும் செல்போன் மூலமாக மருத்துவர்களும்,...
நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு லஞ்சம் கேட்டு செய்யூர் எம்எல்ஏ மிரட்டுவதாக ஒப்பந்ததாரர் வழக்கு
செங்கல்பட்டு மாவட்டத்தை சேரந்த டிஎஸ்ஆர் சன்ஸ் இந்தியா இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நபார்டு திட்டத்தில் ஊரக பகுதிகளான எம்வி ரோடு முதல் அகரம் பகுதி வரை சாலை அமைக்க நெஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது. அதில், புத்திரன்கோட்டை முதல் மாம்பாக்கம் அகரம் ரோடு வரை இரு சாலைகள் அமைக்கும் டெண்டர் எங்களது நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செய்யூர் எம்எல்ஏ பனையூர்...
செம்மொழி தமிழாய்வு துணை தலைவராக சுதா சேஷய்யன் நியமனம்
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்கு செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும்இந்நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்திய கல்விஅமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த...
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு: அமைச்சரின் உத்தரவாதத்துக்கு திருமாவளவன் நன்றி
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கும் போது மதுக்கடைகளை மூடுவதில்என்ன தயக்கம். இக்கொள்கையில் உடன்பாடு உள்ள சாதியவாத, மதவாத சக்திகளைத் தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விசிகவின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம்” என தெரிவித்திருந்தார்.இக்கருத்து அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பான கேள்விக்குப் பதில்...
காந்தி சிலை உடைத்தவர்களை கைது செய்ய எம்.எல்.ஏ. கோரிக்கை
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோட்டில் இரணியல் சர்வோதய சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தி மணிமண்டபம் உள்ளது.
இங்கு அமர்ந்த நிலையில் கருங்கல்லில் செய்யப்பட்ட மகாத்மா காந்தி உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் சமூக விரோதிகளால் இந்த...
ஓணம் பண்டிகை; தோவாளையில் பூக்களின் விலை உயர்வு
குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தையில் தினந்தோறும் பல டன் பூக்கள் விற்பனையாகிறது ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை யொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். அந்த வகையில் நாளை (செப்.,15) ஓணம் பண்டிகை என்பதால் தோவாளையில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
அத்த பூ கோலமிடுவது, பூக்களால் அலங்கரித்து ஓண ஊஞ்சல் ஆடுவது, பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உள்ளூர் வியாபாரிகள் முதல் கேரள வியாபாரிகள் வரை தினமும் பூக்களை அள்ளி செல்கின்றனர்.தோவாளை மலர்சந்தையில் பூக்களை வாங்கி...
அந்தரபுரம் சுடலை கோயிலில் ஆவணி சிறப்பு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் அந்தரபுரம் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசுவாமி திருக்கோயில் சார்பில் ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நேற்று (செப்.,13) நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் சுடலைமாட சுவாமிக்கு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோவாளை ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளையும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.














