Home 2024
Yearly Archives: 2024
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ன்ட், அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.
இந்நிலையில் இன்று காலை (செப்.16) முதல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா...
அண்ணா விளையாட்டரங்கில் குத்துசண்டை வளையம்; துவக்கிய எம்.எல்.ஏ.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை வளையத்தில் மேற்கூரை இல்லாமல் இருந்தது. இதனால் பயிற்சி பெறும் வீரர்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் மேற்கூரை அமைத்து தரும்படி நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி - யிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்த அவர். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணி நடைபெற்று முடிவடைந்தது.
இந்த ...
இரணியல் அருகே தொழிலாளி தற்கொலை- போலீஸ் விசாரணை
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் ராஜ் (55). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் உடல் பலவீனத்தால் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் குடல் இறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் பின்னர் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (செப். 14ஆம் தேதி) காலை 8 மணி...
பாராலிம்பிக்ஸில் ஹாட்ரிக் பதக்கம்: மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் பென்றார். பாராலிம்பிக்ஸில் அவர் வென்ற 3-வது பதக்கமாக இது அமைந்தது. 2016-ம்ஆண்டு பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கமும், 2021-ம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் மாரியப்பன் வென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாரியப்பன் கூறும்போது, “தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ளது பெருமையாக உள்ளது. இந்த முறை மீண்டும் தங்கப்பதக்கம்...
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: 21 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 21 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாளான நேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா மொத்தம் 21 தங்கம்,22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்தது.இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்று 2-வது இடத்தைக் கைப்பற்றியது.
முன்னதாக...
சேப்பாக்கம் மைதானத்தில் 45 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி செய்த விராட் கோலி
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். விராட் கோலி, லண்டனில் இருந்து நேரடியாக நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா தலைமயில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், பந்து வீச்சு பயிற்சியாளர்...
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா – பாக். இன்று பலப்பரீட்சை
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது.
பாகிஸ்தான் அணியானது மலேசியா, கொரியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. அதேவேளையில் ஜப்பானை 2-1 என்ற கணக்கிலும்...
இஃப்தார் விருந்தில் மன்மோகனுடன் தலைமை நீதிபதி பங்கேற்றது சரியா? – காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கேள்வி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவர் அளித்த இஃப்தார் விருந்து புகைப்படத்தை பாஜக பகிர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த புதன்கிழமை டெல்லியில் உள்ள தனது வீட்டில் விநாயகர் பூஜை நடத்தினார். இந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆரத்தி எடுத்து வழிபட்டார். இச்சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர்களும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் விமர்சனம்...
தீவிரவாதிகளை கூட ராகுல் சந்தித்து பேசுவார்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம் செய்துள்ளார். ராகுல் ஒருநாள் தீவிரவாதிகளை கூட சந்தித்து பேசலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தெற்கு பெங்களூரு பாஜகஎம்.பி.யான தேஜஸ்வி சூர்யா,இதுகுறித்து நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இடஒதுக்கீட்டை நீக்குவது தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர் சந்திக்கும் நபர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அமெரிக்க எம்.பி. இல்ஹான் ஒமர் போன்ற இந்திய விரோத சக்திகளை ராகுல் காந்தி...
மகாராஷ்டிராவில் அறுந்து விழுந்த மின்கம்பி குறித்து எச்சரித்த சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
மகாராஷ்டிரா பால்கர் மாவட்ட பள்ளிக்கூட அறிவியல் ஆசிரியர் தர்ஷன். இவரது மகன் ஸ்மித் பந்தாரே (12) மற்றும் மகள் சன்ஸ்கிருதி (9) ஆகிய இருவரும்கடந்த ஆக.25-ம் தேதி வாரவிடுமுறை நாள் என்பதால் வீட்டில்மதியம் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
திடீரென பலத்த சத்தம் வீட்டருகில் கேட்டது. நடந்தது என்ன என்பதை பார்க்க அண்ணன், தங்கை இருவரும் இரண்டாவது மாடியில் உள்ள தங்களது வீட்டின்பால்கனிக்கு ஓடிச் சென்றனர். அப்போது பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளமின்கம்பத்திலிருந்து உயர் மின்னழுத்தக் கம்பி அறுந்து...














