Google search engine
Home 2024

Yearly Archives: 2024

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம்: நஜ்முல் ஷான்டோ நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ நம்பிக்கை தெரிவித்தார்.இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வங்கதேச அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.முன்னதாக வங்கதேசத்திலிருந்து புறப்படும்போது டாக்காவில் செய்தியாளர்களிடம் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எங்களுக்கு நிச்சயம் சவால் அளிக்கக்கூடியதாக...

பாஜகவின் `பி டீம்’ ஆக செயல்படும் உமர் அப்துல்லா, மெகபூபா இருவரும் பொம்மைகள்: அவாமி இட்டிஹாட் கட்சி எம்.பி. விமர்சனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் பொம்மைகள் என அவாமி இட்டிஹாட் கட்சி (ஏஐபி) எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் விமர்சித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த இட்டிஹாட் கட்சி (ஏஐபி) எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிப்பதற்காகவே ரஷீத் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவின் பி டீம் எனகாஷ்மீர் முன்னாள்...

மருத்துவர்களுக்கு தனி அடையாள எண்: என்எம்சி போர்ட்டலில் பதிவு தொடக்கம்

அனைத்து மருத்துவர்களுக்கும் ஆதாரைப் போல தனிப்பட்ட எண்ணுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)அதற்கான பதிவை தொடங்கியுள்ளது. தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை மத்தியசுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய சுகாதார பதிவேடு திட்டம் என்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இது, டிஜிட்டல் ஹெல்த்கேர் சூழலை வலுப்படுத்தும் என்பதுடன் இந்திய மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை உறுதி செய்யும்’’ என்றார். இந்நிலையில், அனைத்துமருத்துவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில்அவர்களுக்கு...

அரசு நிலத்தில் சிம்லா மசூதி விரிவாக்கம்: வன்முறையில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு

இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் அமைந்துள்ள சஞ்சாலி என்றபகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இதன் அருகே அரசு நிலம் உள்ளது. இந்நிலையில் மசூதியின் சுற்றுச்சுவர் விரிவுபடுத்தப்பட்டது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து மசூதியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதை இடிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் கடந்த 11-ம் தேதிபோராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது போராட்டக் காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சி...

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரத்தை காவல் துறையினரே அழித்துள்ளனர்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க காவல் துறையினரே ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக கட்சியைச் சேர்ந்த அம்மாநில எதிர்க் கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித் துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “தற்போது தாலா போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. இதன் மூலம் இவ்வழக்கில் கொல்கத்தா காவல் துறை ஆதாரங்களை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில்...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், ஒகேனக்கல்லில் அருவிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13,217 கன அடியாக...

இந்தியாவிலேயே மோசமான சாதி கட்சி விசிக: பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம்

இந்தியாவிலேயே மிக மோசமான சாதி கட்சி விசிக தான் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஹெச்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்துத்துவா கும்பல் திராவிட கட்சிகளை ஒழிக்க நினைக்கிறது என வைகோ கூறியிருக்கிறார். முதலில் மதிமுகவை ஒழித்தது யார் என்று அவர் சொல்லட்டும். இன்று மதிமுக என்ற கட்சியே காணாமல் போயிருக்கிறது....

செவிலியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் 18% அதிகரிக்கிறது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

இந்தியாவில் செவிலியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் 18 சதவீதமும், உலக அளவில் 100 சதவீதமும் அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் தனியார் செவிலியர்கள் கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலிக்காட்சி மூலம் பங்கேற்று ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியது: பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டுவர். ‘கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு லாபம் சம்பாதித்து செல்பவர்கள்; அவர்களுக்கு...

புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்? – தெளிவுபடுத்த சசிகலா வலியுறுத்தல்

திமுக செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன; எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா தெரிவித்தார். அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா வந்தார். அவர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அண்ணாவின் இல்லத்தையும் அவரது புகைப்படங்களையும் சுற்றிப் பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 4 முறை...

“கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் கட்சியின் சுதந்திரமான முடிவு” – திருமாவளன்

“தேர்தல் கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது.” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' குறித்து திருவாரூரில் நடைபெற்ற மண்டல சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி திருமாவளவன் இக்கருத்தினைக் கூறினர். ஏற்கெனவே ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று திருமாவளவன் பேசிய கருத்து தமிழக அரசியல் களத்தில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...