Google search engine
Home 2024

Yearly Archives: 2024

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சியில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

0
நாம் தமிழர் கட்சிக்கு தலைமைவகிக்கும் தகுதியை சீமான் இழந்துவிட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். நாதக திருச்சி மண்டலச் செயலாளர் இரா.பிரபு தலைமையில், வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ச.முருகேசன், முன்னாள் நிர்வாகிகள் எம்.ஜாபர் சாதிக், மதுரை வெற்றிக்குமரன், தனசேகரன், சர்வத்கான், ஏ.தேவராஜ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்கிறார். அவரது பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ் தேசிய உணர்வாளர்களின் உழைப்பைச் சுரண்டி, சொகுசு...

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து குடியிருப்போர் சங்கங்களுக்கு பயிற்சி: மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், குடியிருப்போர் நலச்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி அளிக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. டிசம்பர் வரையிலான இந்த மழைக்காலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் அதிகளவில் மழையை பெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிகளவில் தண்ணீர்தேங்கி ஆண்டுதோறும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. தலைமை செயலர் ஆலோசனை: இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கும் விதமாக, தலைமைச்...

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பெருமிதம்

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார். சென்னை துறைமுகம் சார்பில், ‘நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் சக்தியை பயன்படுத்துதல்’ என்றநிகழ்ச்சியும் பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தூய்மைப்பணி தொடக்க விழாவும் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர்சுனில் பாலிவால் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ‘அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு இன்று பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இதன்மூலம், வரும் 2047-ம்ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக...

வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

வெள்ளி விழா, பொன் விழா,பவள விழாவின்போது ஆட்சியில் இருப்பதுபோல, நூற்றாண்டு விழாவின் போதும் திமுக ஆட்சியில் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் நேற்று நடந்த திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் முதல்வர் பேசியதாவது: தொண்டர்களின் வியர்வை, மூச்சுக் காற்றால்தான் திமுக கம்பீரமாக, தலை நிமிர்ந்து நிற்கிறது. நீங்கள் இல்லாமல் திமுக இல்லை; நானும் இல்லை. கடந்த 1967-ம் ஆண்டு எனது 13 வயதில் கோபாலபுரத்தில் திமுக இளைஞர் அணியை தொடங்கி,53 ஆண்டு இயக்கத்துக்கும், தமிழகத்துக்கும் உழைத்த உழைப்புக்கான...

நிபா வைரஸ் பரவாமல் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு

கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க, எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்த 151 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில்5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் உள்ளது.இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அந்தபாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு...

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் உடைந்து விழுந்த குழாய்

மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மத்திலிருந்து மார்த்தாண்டம் சந்திப்பு வழியாக இரண்டரை கிலோ மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் கனரக இரும்பினால் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.       மேம்பாலத்தின் மேல் பகுதியில் இருந்து மழை நீர் கீழே சாலை வழியாக செல்ல பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த பிளாஸ்டிக் குழாய்களில் ஆங்காங்கே பழுதுகள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் மேம்பாலத்தில் இருந்து கீழே கொட்டுகிறது.        இந்த நிலையில் நேற்று மாலை மார்த்தாண்டம்...

கருங்கலில் எச்.ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பு குழு தலைவர் எச். ராஜாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருங்கலில் நேற்று (17-ம் தேதி) மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ தலைமை வகித்து விளக்கவுரையாற்றினார்.    காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு  பொருளாளர் விஜய்வசந்த் எம். பி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற...

பைக்.. ஆம்னி பஸ் மோதி.. நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழியர் பலி

மார்த்தாண்டம் அருகே உள்ள அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர்  விஜயன் மகன் வினு (27). இவர் நெடுஞ்சாலை பணி ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்ள் ஆகியுள்ளது. நேற்று முன்தினம்  இரவு வினோ பைக்கில் காட்டாத்துறையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிராயன்குழி சர்ச் பகுதியில் வந்த போது எதிரே வேகமாக வந்த ஆம்னி பஸ் ஒன்று வினு ஓட்டி சென்ற பைக்கில் மோதி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை அந்த...

டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2-வது இடம்

டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2-வது இடம் கிடைத்தது. முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நேற்று முன்தினம் தொடங்கியது. உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட போட்டியின் இறுதி சுற்று தற்போது பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வருகிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றிருந்தனர். 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபின் சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே 9-வது இடம்...

45-வது செஸ் ஒலிம்பியாட்: 4-வது சுற்றிலும் இந்திய அணி அபார வெற்றி

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி யின் 4-வது சுற்றிலும் இந்திய ஆடவர் அணியினர் வெற்றி கண்டனர். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் செர்பியாவை எதிர் கொண்டது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ் 85-வது காய் நகர்த்தலின் போது பிரட்கே அலெக்சாண்டரை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, செர்பியா வீரர் சரானா அலெக்ஸி ஆகியோர் இடையிலான ஆட்டம் 23-வது காய் நகர்த்தலின் போது டிராவில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...