Home 2024
Yearly Archives: 2024
‘ஹிட்லர் மிரட்டலான ஆக்ஷன் படம்’
விஜய் ஆண்டனி, ரியா சுமன் நடித்துள்ள படம் ‘ஹிட்லர்’. சரண்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, இயக்குநர் தமிழ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரித்துள்ளனர்.
வரும் 27-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் தனா கூறும்போது, “இது ஆக் ஷன் படம். ஒரு பக்கம் விஜய் ஆண்டனி, இன்னொரு பக்கம் கவுதம்...
லெபனானில் பேஜர்கள் வெடித்ததில் 1,000 தீவிரவாதிகள் படுகாயம்
லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் லெபனானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் புவாட் ஷூகர் உயிரிழந்தார். இதன்பிறகு இருதரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது.பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், செல்போன்களை பயன்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக...
அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்
அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.பயணத்தின் ஒரு பகுதியாக, செப்.23 ஆம் தேதி ‘Summit of the Future’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி, ஐ.நா...
எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் நாளை தொடக்கம்
95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது.
வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம், பாரத் பெட்ரோலியம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி‘ பிரிவில் கர்நாடகா, இந்தியன் ஆயில், என்சிஓஇ போபால், மத்திய தலைமைச் செயலகம், ஒடிஷா ஆகிய அணிகள்...
அட்யா பட்யாவில் இந்திய அணிகள் சாம்பியன்
8-வது தெற்காசிய அட்யா பட்யா சாம்பியன்ஷிப் பூட்டானில் கடந்த செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூட்டான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மர் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றன.
இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 29-13,16-10 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி 17-14, 15-9 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிகளில்...
கொல்கத்தாவின் புதிய போலீஸ் கமிஷனராக மனோஜ் குமார் வர்மா நியமனம்
மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனராக மனோஜ் குமார் வர்மாவை நியமித்துள்ளது. 1998-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த இந்திய காவல் பணி அதிகாரியான வர்மா, மேற்கு வங்க சட்டம் - ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்தி வரும் மருத்துவ மாணவர்களுடன் திங்கள்கிழமை இரவு சந்திப்பு நடத்தியதற்கு பின்பு கோயலை கொல்கத்தா காவல் ஆணையர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்....
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள24 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஒன்றுபட்ட மாநிலமாக...
ஒடிசாவில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி: சுபத்ரா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஒடிசா அரசின் சுபத்ரா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 25 லட்சம்பெண்களுக்கான நிதியுதவியை அவர் வழங்கினார்.
சமீபத்தில் நடந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றார். ஒடிசா தேர்தலின்போது, பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் 5 ஆண்டுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சுபத்ரா என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கப்படும் என்று...
2020-ல் முதல் முறை எம்எல்ஏ; 2024-ல் டெல்லி முதல்வர்: அசுர வளர்ச்சி பெற்ற ஆதிஷி
020-ம் ஆண்டு டெல்லி கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டஆதிஷி தற்போது டெல்லி முதல்வராகி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியதில் ஆதிஷிக்கு முக்கிய பங்கு உண்டு. நெருக்கடியான அந்த காலகட்டங்களில் அவரின் செயல்பாடு பலரின் பாராட்டை பெற்றது.
பல முக்கிய துறைகளை வைத்துக்கொண்டு திறமையுடன் செயல்பட்டார். அதனால்தான், டெல்லியில் மூவர்ண கொடியை ஏற்றுவதற்கு ஆதிஷியின் பெயரை ஆளுநரிடம்...
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆதரவு
நாடாளுமன்ற மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில் இந்த திட்டத்தை வலியுறுத்தி இருந்தார். அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில் ஒரே நாடு ஒரேதேர்தல் திடத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் லோக்ஜனசக்தியும்...














