Home 2024
Yearly Archives: 2024
சனாதன தர்மம் இருப்பதால் நெருக்கடியால் இந்தியாவை அழிக்க முடியாது: மோகன் பாகவத் கருத்து
சனாதன தர்மம் இருப்பதால் நெரு க்கடிகளால் இந்திய தேசத்தை அழிக்க முடியாது என ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பால்நாத் ஆசிரமத்துக்கு நேற்று முன்தினம் சென்ற அவர் அங்கு நடத்தப்பட்ட மகாமிருத்யுஞ்சய் மகாயாகத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: நெருக்கடிகளுக்கு இந்தியாவை அழிக்கும் சக்தி இல்லை. ஏனெனில் இந்தியா சனாதன தர்மத்துடன் உள்ளது. இந்தியா வெறும் நிலம் அல்ல. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் ஏழைகளாக இருக்கும் நமது சகோதரர்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள...
சட்டவிரோதமாக கட்டப்பட்ட பிஆர்எஸ் கட்சி அலுவலகத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ‘ஹைட்ரா’ எனும்அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி வருகிறது.
இந்நிலையில், நல்கொண்டா மாவட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்டிடம் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சியின்போது, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என தற்போதைய சாலை மற்றும்கட்டிட துறை அமைச்சர் கோமிட்டிரெட்டி வெங்கட்ரெட்டி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து பிஆர் எஸ் கட்சியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் “ஓர் அரசே, அரசு நிலத்தைஆக்கிரமிப்பு செய்து சொந்த கட்சிக்கு கட்டிடம் கட்டி கொண்டால்அது...
வங்கதேச அணி இந்தியாவில் விளையாட அனுமதிக்க கூடாது: இந்து மகாசபா, சர்ச்சை துறவி நரசிம்மானந்தா எச்சரிக்கை
கிரிக்கெட் விளையாட இந்தியாவந்துள்ள வங்கதேச ஆண்கள்அணிக்கு எதிர்ப்பு வலுக்கிறது. வட மாநிலங்களில் இவர்கள்விளையாட இந்து மகாசபாவினரும், உத்தர பிரதேசத்தின் சர்ச்சை சாது யத்தி நரசிம்மானந்தாவும் எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் அரசு ஆகஸ்ட் 5 -ல் ஆட்சியை இழந்தது. இந்த கிளர்ச்சியில் வங்கதேசத்தின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்களின் கிளர்ச்சியில் உயிர்தப்பிய அந்நாட்டின் பிரதமர்ஷேக் ஹசீனா தன் குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கு இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இந்துத்துவ அமைப்பினர்...
குழந்தைகளுக்கான ‘என்பிஎஸ் வாத்சல்யா’ ஓய்வூதிய திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ‘என்பிஎஸ் வாத்சல்யா' திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம்அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக ஓய்வூதியக் கணக்கில் பணத்தை சேமித்து வரலாம். குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியதும், அவர்கள்அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத்...
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் வாக்குமூல ஆடியோ சமூக ஊடகங்களில் பரவுவதாக குற்றச்சாட்டு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமியிடம் போலீஸார் பெற்ற வாக்குமூலம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும்சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை அங்கிருந்த பெண்காவல் ஆய்வாளர்...
மருத்துவர் சுப்பையாவின் பணியிடை நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக பணிபுரிந்த மருத்துவர் சுப்பையாவுக்கு எதிராக பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் சுப்பையா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில்ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மருத்துவர்சுப்பையாவுக்கு எதிராக இதுபோலபல புகார்கள் தொடர்ச்சியாக வருவதாக தெரிவித்தார். அதையடுத்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்திருந்த மனுவை தனி...
டென்னிஸ் சங்க தலைவர், துணை தலைவராக விஜய் அமிர்தராஜ், கார்த்தி ப.சிதம்பரம் தேர்வு
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவராக விஜய் அமிர்தராஜ் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், துணைதலைவராக கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நுங்கம்பாக்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள டென்னிஸ் மைதானஅரங்கில் கடந்த 16-ம் தேதிநடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின்தலைவராக முன்னாள் வீரர் விஜய் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக ஏ.வெள்ளையன், கார்த்திப.சிதம்பரம் எம்.பி., ஹரேஷ் ராமசந்திரன், விஜய் சங்கர் ஆகியோரும், செயலாளராக பி.வெங்கடசுப்ரமணியம், பொருளாளராக டோட்லா விவேக்குமார் ரெட்டியும் தேர்வாகி உள்ளனர்.மேலும்...
மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்: சீமான் கருத்து
மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அம்பேத்கர், பெரியாரை போற்றுவதைப்போல, திருவிக,மறைமலை அடிகள், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், முத்துராமலிங்கத் தேவர், வேலு நாச்சியார், அழகுமுத்துக்கோன் போன்றவர்களையும் நடிகர் விஜய் போற்ற வேண்டும். அவருடன் கூட்டணி அமைப்பீர்களா என்று என்னை கேட்பதைவிட, சீமானுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று அவரிடம் கேளுங்கள்.
என்னைப் பொறுத்தவரை தேசியம், திராவிடம் பேசுவோருடன் கூட்டணி கிடையாது. எனதுகொள்கைக்கு உடன்பட்டு, கூட்டணி...
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது புதிய வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நடவடிக்கை
சென்னையில் மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம்விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 நவ.1, 7, டிச. 1 மற்றும் 2019 ஜன. 3, செப். 26, 2020 பிப். 14 ஆகியதேதிகளில் புகார் அளித்திருந்தார். அதில், 2018-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் மழைநீர்...
சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு: பெப்சி சார்பில் குழு அமைக்க முடிவு
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் சினிமாவின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நவ.1 முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்பைத் தொடங்குவது என்றும் இல்லை என்றால் சுமுக முடிவு எடுக்கும் வரை அனைத்து பணிகளையும் நிறுத்தி வைப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாகத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு அனுப்பிய மறு சீரமைப்பிற்கான விதிமுறைகள் அனைத்துக்குமான பதிலை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பியுள்ளோம். பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி விரைவில் முடிக்க...














