Home 2024
Yearly Archives: 2024
திக்கணங்கோட்டில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் நேற்று (செப்.,19) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், திக்காணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 67 இலட்சம் மதிப்பில் மைலோடு- சேவியர்புரம் – புதூர், கொட்டாரத்துவிளை சாலை சீரமைக்கும் பணியினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமானதாக இருக்கவும், விரைந்து பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும்...
கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் நாளை மின்தடை
கன்னியாகுமரி உபமின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.,21) நடக்கிறது. எனவே காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்ன முட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், ஜேம்ஸ்டவுண், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், லீபுரம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், காக்கமூர், கொட்டாரம், பொத்தையடி, தோப்பூர், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
குமரி கலங்கரை விளக்கத்திற்கு இலவச அனுமதி
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையம் செல்லும் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக்கம் உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தில் நாளை (செப். 21) இந்திய கலங்கரை விளக்க தினத்தையொட்டி ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று கன்னியாகுமரி கலங்கரை விளக்க பொறுப்பாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம்: இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணிப்பு
பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் ஓராண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர கோரும் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணித்தன. இருப்பினும் 124 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. மேலும் கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் இந்த தாக்குதல் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்திய போதிலும், இஸ்ரேல் தாக்குதலை கைவிடவில்லை. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்....
லெபனானில் வாக்கி-டாக்கிகள் வெடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலி, 3,250 பேர் காயம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (செப்.18) ஒரே நேரத்தில் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள், சில சூரிய மின் சக்தியால் இயங்கும் உபகரணங்கள் வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்று அதே பாணியில் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்கி-டாக்கிகள் அனைத்துமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியது எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள் வெடித்த...
உணவு பொட்டலங்களில் பயன்படுத்தும் 3,600 வகை ரசாயனம் மனித உடலில் கலப்பு: மலட்டுத் தன்மை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்
பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் உள்ளிட்டவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘எக்ஸ்போசர் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட்டல் எபிடமியாலஜி’ என்ற இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.
இதுகுறித்து சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் உள்ள உணவு பேக்கேஜிங் கூட்டமைப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிர்கிட் கியூக்கி கூறியதாவது: உணவுடன் தொடர்புடைய ரசாயனங்களில் 100 வகை ரசாயனங்கள் மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானவையாக வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒட்டாமல் சமைக்க உதவும் பாத்திரங்களில் பூசப்படும் பிஎஃப்ஏ நுண்பொருட்கள் (PFAS),...
லெபனானில் 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் சதி அம்பலம் – நடந்தது என்ன?
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5 ஆயிரம் பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் பேர் இதில்காயமடைந்துள்ளனர். இந்தச் சதிச்செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தற்போது தெரியவந் துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில்செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரை...
தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் வெற்றி: ஆப்கன் அபாரம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் அபார பந்து வீச்சின் மூலம் தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களில் ஆல் அவுட் செய்தது.
ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மூன்று, ஐந்து மற்றும் ஏழாவது ஓவர்களை வீசிய ஆப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் பரூக்கி, தென்...
இலங்கை கிரிக்கெட் அணியின் ‘காப்பான்’ – கமிந்து மெண்டிஸ்
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ். 173 பந்துகளில் 114 ரன்களை எடுத்து அவர் அசத்தினார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (புதன்கிழமை) கல்லே நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் பேட்டிங் ஆர்டரில்...
நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியுடன் ஆதிஷி சிங்கின் பெற்றோருக்கு தொடர்பு: ஸ்வாதி மாலிவால் மீண்டும் விமர்சனம்
டெல்லியின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள ஆதிஷியை அவரது கட்சியின் அதிருப்தி எம்.பி. ஸ்வாதி மாலிவால் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவர்களுடன் ஆதிஷி சிங் மர்லேனாவின் பெற்றோர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக முதல்வர் பதவிக்கு அமைச்சர் ஆதிஷியின் பெயரை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆதிஷியை ஆம் ஆத்மி கட்சியின்...














