Google search engine
Home 2024

Yearly Archives: 2024

வாக்குப்பதிவு அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தை வலுவாக்குகிறது காஷ்மீர்: பிரதமர் மோடி பெருமிதம்

ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் ஜனநாயகத்தை காஷ்மீர் வலுவாக்கி வருகிறது என்று 2-ம் கட்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஸ்ரீநகர்,கத்ரா பகுதிகளில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது: “காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள்...

‘விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் திருப்பதி லட்டு தயாரிப்பு’ – சர்ச்சையும் பின்னணியும்

திருப்பதி லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஆனால், இந்த லட்டு பிரசாதத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில், விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமனம் செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், பதவி பொறுப்பேற்றதும், திருமலையில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, லட்டு பிரசாதத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார். அப்போது நெய்யில் கலப்படம் இருப்பதை அறிந்த அவர், அதனை...

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 நிதியுதவி: ஹரியானா பேரவை தேர்தலில் பாஜக வாக்குறுதி

மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ஹரியானா முதல்வர் நயாப் சிப் சைனி, மத்திய அமைச்சர்கள் எம்.எல்.கட்டார், ராவ் இந்தர்ஜித் சிங், கிரிஷன் பால் குர்ஜார் ஆகியோர் முன்னிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதனை வெளியிட்டார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில், “அக்னி வீரர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் 24 விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100...

இந்தியா – வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரைபிசிசிஐ உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தலைமை தாங்கினார். அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: வங்கதேச மக்களை பாகிஸ்தான் கொடுமைப்படுத்தியபோது, இந்திய ராணுவம் அங்குசென்று வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கிக்கொடுத்தது. அப்போது 26 சதவீதம் இந்துக்கள் அங்கு இருந்தார்கள். தற்போது, அங்கு 7 சதவீதஇந்துக்கள்தான் இருக்கிறார்கள்....

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை மிரட்டும் வகையில் பேசியவர்கள் மீது பாஜக தலைமையோ, பிரதமர் மோடியோ உரிய நடவடிக்கை எடுக்காததற்கு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகிலஇந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே,சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் எஸ்.ராஜேஷ்குமார்உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.ஒரே நாடு ஒரே தேர்தல்: இக்கூட்டத்தில்,...

கேரள முதல்வருக்கு சென்னையில் மருத்துவ பரிசோதனை

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடந்தது. நேற்று காலை சென்னை வந்த பினராயி விஜயன், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட இதயம் தொடர்பான பரிசோதனைகள், ரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பரிசோதனையில், அவரது உடல்நலம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்போலோவில் இருந்து அவர் நேற்றுமதியம் புறப்பட்டு சென்றார். சிலஆண்டுகளுக்கு முன்பு சென்னைஅப்போலோ மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர் எழுதிய கடிதம்: ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது கொலை தொடர்பான வழக்குகள், செல்வப்பெருந்தகை மீது உள்ளன.ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்துறைகளை கட்டுப்படுத்தும் ஒருவன்முறை கும்பலின் தலைவர்தான் வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரன். அவருடைய மகன், இளைஞர் காங்கிரஸில் பொதுச்செயலாளராக இருந்த அஸ்வத்தாமன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இளைஞர் காங்கிரஸில் நியமித்தது செல்வப்பெருந்தகைதான். ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகை ஏன் கைது செய்யப்படவில்லை என்ப மக்கள்...

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனத்தில் உள் ஒதுக்கீடு அளிக்கவும் அவர்கள்கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 30 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், அந்த காலியிடங்களில் ஐடிஐ படித்தவர்களையும் ஐடிஐஅப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களையும் பணிநியமனம் செய்யக்கோரி தமிழ்நாடு ஐடிஐ படித்த வேலைவேண்டுவோர் ஐக்கிய சங்கம் சார்பில் அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக பின்நுழைவுவாயில் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அந்த...

பறவைகள் காட்சி கோபுரத்தை சீரமைக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் பகுதிக்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அவைகளை பார்வையிடுவதற்காக தேரூரில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கோபுரம் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

வீட்டில் கஞ்சா புகைத்த  வாலிபர்கள் கைது

அருமனை அருகே உள்ள குஞ்சாலு விளையை சேர்ந்த ஸ்டீபன் மகன் மணிகண்டன் (23). இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் மகன் சிவப்பிரசாத் (27) என்பவரும் நண்பர்கள். மணிகண்டன் வீட்டிற்கு சிவப்பிரசாத் அடிக்கடி வருவது வழக்கம்.   நேற்று (செப்.,19) அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில்  கஞ்சாவை பாட்டிலில் போட்டு புகைத்து அதனை உறிஞ்சி சுவாசித்துக் கொண்டிருந்தனர். இதில்  போதையில் புலம்ப தொடங்கினர். இந்த நிலையில் வீட்டிலிருந்து வித்தியாசமான வாசனையுடன்  புகை வந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...