Google search engine
Home 2024

Yearly Archives: 2024

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் ஆணையம்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பதில் கடிதம்

உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை பெற, இந்திய தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து,மாற்ற மாவட்டங்களில் உள்ள ஊரகஉள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த ஊரகஉள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம், இந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இவை தவிர, கடந்த 2021-ம்ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு புதிதாக...

கண்ணப்பர் திடலில் வசிக்கும் 114 வீடற்றோர் குடும்பங்களுக்கு இன்று வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக வசித்து வரும் 114 வீடற்றோர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று வழங்குகிறார். சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்காக அகற்றப்பட்டன. இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் அப்போது தங்க வைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இதுகுறித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் 'இந்து தமிழ் திசை'...

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை...

காசா – ஹமாஸ் தீவிரவாதிகளை அடுத்து ஹிஸ்புல்லா மீது கவனம் செலுத்தும் இஸ்ரேல்

ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலால் காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல், தற்போது லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது கவனத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். இதனால் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்நிலையில் காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட்...

புதினுடன் பேசுங்கள் அல்லது அணு ஆயுத போரை எதிர்கொள்ளுங்கள்: அமெரிக்க அரசுக்கு ட்ரம்ப் மகன் எச்சரிக்கை

ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களையும் நிதியுதவியையும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அளித்து வருகின்றன. தற்போதைய சூழலில் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவில்லை. சில ஏவுகணைகளை வழங்கியிருந்தாலும் அவற்றை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் அண்மையில் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும்போது,...

அஸ்வின் 102*, ஜடேஜா 86* ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 339 ரன்கள் குவிப்பு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலையை பயன்படுத்தி வங்கதேச...

இந்திய ஸ்டார் பேட்ஸ்மேன்களை ‘சம்பவம்’ செய்த ஹசன் மஹ்முத் யார்?

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் அபாரமாக பந்து வீசினார். அவர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா (6), ஷுப்மன் கில் (0), விராட் கோலி (6), ரிஷப் பந்த் (39) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். 24 வயதான ஹசன் மஹ்முத், தனது 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச...

அதிரடியாக சதம் விளாசியது எப்படி? – மனம் திறக்கும் அஸ்வின் | IND vs BAN முதல் டெஸ்ட்

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 91.07 ஆகும். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் ஜடேஜாவுடன் இணைந்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு இந்திய அணியை சரிவில் இருந்து வலுவான நிலைக்கு கொண்டு வந்தார். முதல் நாள் ஆட்டத்துக்கு பின்னர் அஸ்வின் கூறியதாவது: சொந்த மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்போதுமே...

“ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்” – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

தூய்மையான, ஆரோக்கியமான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தியுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் இன்று (செப். 19) நடைபெற்ற தூய்மைப் பணியாளர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "நமது தூய்மைப் பணி நண்பர்கள் முன்வரிசை தூய்மைப் போராளிகள். நோய்கள், அழுக்கு மற்றும் சுகாதார அபாயங்களிலிருந்து அவர்கள், நம்மைப் பாதுகாக்கின்றனர். தேச நிர்மாணத்தில் அவர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். உள்ளூர், மாநில மற்றும்...

ஆந்திர அரசுக்கு மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதிலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதிலும் மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கான அரசாங்கங்கள் உள்ளன. இவை மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய முடிவுகளை எடுக்கும் அரசாங்கங்கள். ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...