Google search engine
Home 2024

Yearly Archives: 2024

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்று சாதனை

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் இந்தியா 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் கடைசி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, சுலோவேனியாவுடன் மோதியது. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் டி. குகேஷ், விளாடிமிர் ஃபெடோசெவை 48-வது காய் நகர்த்தலின் போது வீழ்த்தினார். தொடர்ந்து இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, ஆன்டன் டெம்சென்கோவுடன் மோதினார். இதில் 53-வது காய் நகர்த்தலின்போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 3-வதாக நடைபெற்ற...

வலுவான பந்துவீச்சு கொண்ட அணியை உருவாக்க விரும்புகிறோம்: சொல்கிறார் ரோஹித் சர்மா

சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: வலுவான பந்துவீச்சு கொண்ட அணியை உருவாக்க விரும்புகிறோம், நிலைமைகள் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள நாங்கள்தயாராக இருக்க வேண்டும். நிலைமைகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் இந்தியாவில் விளையாடினாலும், வெளிநாட்டில் விளையாடினாலும், அதற்கு தகுந்தவாறு அணியை உருவாக்க விரும்புகிறோம். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் விரும்பிய முடிவைபெற்றுள்ளோம். ரிஷப் பந்த் சில கடினமான...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்வு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. ஆட்ட நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வானார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விளாசிய 113 ரன்கள், ரவீந்திர ஜடேஜா சேர்த்த 86 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 376 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதேவேளையில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது...

ஆட்சேபனை கருத்து: வருத்தம் தெரிவித்தார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுவது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா வருத்தம் தெரிவித்துள்ளார். நிலத்தின் உரிமையாளர் - குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார். மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக பெண் வெறுப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் .இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (செப்.20) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்...

‘‘என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார்’’: அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

தன்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குற்றம்சாட்டினார். டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'மக்கள் நீதிமன்றம்' (‘ஜன்தா கி அதலாட்’) நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மின்சாரம் மற்றும் தண்ணீரை நாங்கள் இலவசமாக்கினோம். மக்களுக்கான சிகிச்சையை இலவசமாக்கினோம், சிறந்த கல்வியை வழங்கினோம். மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால்,...

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதம் தொடங்கினார்

திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாத நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், கடந்தஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை நேற்று தொடங்கியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற நெய் வாங்கியது கண்டறியப்பட்டது. அந்த நெய்யை பரிசோதித்ததில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் பக்தர்கள் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்து...

தொடர் பண்டிகை விடுமுறை வருவதால் ரயில்களில் தீவிர டிக்கெட் பரிசோதனை நடத்த உத்தரவு

பண்டிகைக் காலம் நெருங்கி வருகிற நிலையில், ரயில்களில் டிக்கெட் சோதனைக்கு என்று சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தொடர் பண்டிகை விடுமுறை சமயத்தில், மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதால், நிறையமக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் காணப்படும் நிலையில், பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இத்தகைய பயணிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க சிறப்பு சோதனையை மேற்கொள்ள மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.சட்டப்படி நடவடிக்கை: இது...

ஜம்மு காஷ்மீரில் கல் வீசியவர்கள், தீவிரவாதிகளை விடமாட்டோம்: தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா உறுதி

ஜம்மு காஷ்மீரில் கல் வீசியவர்கள், தீவிரவாதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனாவை ஆதாரித்து நவ்ஷேரா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல் வீசியவர்கள் மற்றும் தீவிரவாதிகளை ஆட்சிக்கு வந்தபின் விடுவிப்போம் என தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தங்கள்...

பெண்கள் மீதான வன்முறைகளை களைய பள்ளியில் இருந்து பாலின சமத்துவத்தை தொடங்க வேண்டும்: முன்னாள் நீதிபதி சந்துரு

பெண்கள் மீதான வன்முறைகளைக் களைய, பாலின சமத்துவத்தை பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார். மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, டாக்டர் கோபிகர் அறக்கட்டளை, இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமம், சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் ஹோமியோபதி ஆகியவை சார்பில், மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவச்சலத்தின் 17-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் "பெண்கள் மீதானதொடர் வன்முறை - வேரும் தீர்வும்" என்ற தலைப்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் நீதிபதி கே.சந்துரு...

தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுன்ட்டர் அதிகரிப்பு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில். ‘கந்து வட்டிஒழிப்பு’ மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், நிதி பற்றாக்குறைக்காகவும் சில தனியார்நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றனர். கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாதபோது, இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, மக்களை கடன் வலையிலிருந்து...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...