Home 2024
Yearly Archives: 2024
திங்கள்சந்தை அருகே பைக் மோதி தம்பதி படுகாயம்
வாணியக்குடி அருகே உள்ள புதுகுடியிருப்புவிளை பகுதியைச் சேர்த்தவர் மல்கியா. இவரது மனைவி வில்லி சுகிர்தா. நேற்று முன்தினம் (செப்.21) மாலை மகளைப் பார்க்க இருவரும் பைக்கில் சென்றனர். அப்போது மகள் வீட்டு முன்பு ஓரமாக பைக்கை நிறுத்திய நிலையில் லில்லி சுகிர்தா இறங்கினார். மல்கியா இறங்க முயன்ற போது, நாகர்கோவிலில் இருந்து ஒரே பைக்கில் வந்த அஸ்வின், ஜினு, முகேஷ் ஆகிய 3 வாலிபர்கள் அசுர வேகத்தில் மல்கியா பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மல்கியாவுக்கு...
சாலையில் முறிந்து விழுந்த பழமையான மரம்- போக்குவரத்து பாதிப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு என்ற இடத்தில் உண்ணாமலை கடை பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் முன்புறம் சுமார் நூறாண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று காணப்பட்டது. இந்த மரத்தின் கீழ் பகுதியில் இருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து வளர்ந்து நின்றது.
இதில் ஒரு கிளை நேற்று(செப்.22) மாலை திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் மார்த்தாண்டத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
உடனடியாக...
மார்த்தாண்டத்தில் புதிய போலீஸ் சப்-டிவிஷன் துவக்கம்
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய நான்கு போலீஸ் சப்-டிவிஷன்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் மிகப்பெரிய சப்-டிவிஷன் ஆக விளங்கிய தக்கலையை பிரித்து மார்த்தாண்டத்தை மையமாகக் கொண்டு புதிய சப்டிவிஷன் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் இருந்து வந்தது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தக்கலை சப்-டிவிஷன் பிரிக்கப்பட்டு மார்த்தாண்டம், களியக்காவிளை, கொல்லங்கோடு, நித்திரவிளை போன்ற காவல் நிலையங்கள் உட்பட மொத்தம் பத்து காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டு மார்த்தாண்ட புதிய சப்-டிவிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சப் டிவிஷனில்...
விஜய்யிடம் கால்ஷீட் கேட்டேனா? – வதந்தி குறித்து சிம்ரன் ஆவேசம்
நடிகை சிம்ரன், தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாயின. அதோடு அவருடைய கடைசிப் படமான விஜய் 69-ல் நடிக்க வாய்ப்புக் கேட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அதை மறுத்துள்ள சிம்ரன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுவரை எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன். இப்போது என் வாழ்வின் இலக்குகள் மாறிவிட்டன. ஒருபெண்ணாக, எனது எல்லைகளை அறிவேன். சமூக வலைதளங்களில் என்...
திரை விமர்சனம்: கோழிப்பண்ணை செல்லதுரை
சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் (ஏகன்), அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் (சத்யா) கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி (யோகிபாபு) ஆதரவளிக்கிறார். பின் பெரியசாமியின் கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான்செல்லதுரை. அவரை, அருகில் பானைக்கடை வைத்திருக்கும் தாமரைச்செல்வி (பிரிகிடா சகா), காதலிக்கிறார். சூழ்நிலை காரணமாக அதை அவன் புறக்கணிக்கிறான். இந்நிலையில் தன் கல்லூரியில் அறிமுகமாகும் ஒருவருடன் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் செல்லதுரை வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? அவன் பெற்றோர் என்ன ஆனார்கள்? தாமரைச்செல்வியின் காதல் என்ன ஆனது? என்கிற...
துர்கா பூஜையை முன்னிட்டு ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது வங்கதேசம்
துர்கா பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஹில்சா மீன்ஏற்றுமதி தடையை வங்க தேசஅரசு நீக்கியுள்ளது. இதன்படி, 3 ஆயிரம் டன் ஹில்சா மீன்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று நேற்றுமுன்தினம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது, ஹில்சா மீன்கள் அதிகம் உண்ணப்படுகின்றன. இந்த மீன்கள் பெரும்பான்மையாக வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.மாணவர்கள் கலவரம் வெடித்தைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினமா செய்து ஷேக்ஹசீனா இந்தியா தப்பி வந்தநிலையில்,...
கடத்தப்பட்ட 297 அரிய கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அளித்தது அமெரிக்கா
இந்தியாவில் இருந்து ஏராளமான கலைப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலைகள் உட்பட ஏராளமான அரிய பொருட்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட இந்திய கலைப்பொருட்களை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் அரிய கலைப்பொருட்கள் குறித்தும் பேசியுள்ளார். இதையடுத்து, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்களை அமெரிக்க அரசு மீண்டும் ஒப்படைத்துள்ளது. இவற்றையும் சேர்த்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம்...
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல் அதிகரிப்பு: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு அமெரிக்கா உத்தரவு
கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நசரல்லாவின் வலதுகரமாக செயல்பட் புவத் ஷுக்கர் கொல்லப்பட்டதை தொடர்ந்து லெபனான் நாட்டுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படையின் தளபதி இப்ராஹிம் அக்கீல் மற்றும் அஹமது வாபி ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில்தான், தனது குடிமக்களை லெபனான் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது....
நியூயார்க்கில் டெக் நிறுவன சிஇஓ-க்கள் உடன் பிரதமர் மோடி வட்டமேசை ஆலோசனை
அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவன சிஇஓ-க்கள் பங்கேற்ற வட்டமேசை கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடாப் சிஇஓ சாந்தனு நாராயண், ஐபிஎம் சிஇஓ அர்விந்த் கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு குவாட் மாநாட்டில் பங்கேற்ற அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்தார்.இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை...
‘நீங்கள் இந்தியாவின் தூதுவர்கள்’ – அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அங்கே திரண்டிருந்தவர்களை நோக்கி ‘நீங்கள் இந்தியாவின் தூதுவர்கள்’ என அவர் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமெரிக்க அதிபரின் இல்லத்தில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை...














