Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கேஜ்ரிவால் இருக்கையில் அமராத டெல்லி முதல்வர் ஆதிஷி

டெல்லி முதல்வராக ஆதிஷி மர்லேனா சிங் நேற்று முறைப்படி பொறுப்பேற்றார். அவர். முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டு, அருகில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில்இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். கடந்த 17-ம் தேதிஅவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குபதிலாக கடந்த 21-ம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி மர்லேனா சிங் பதவியேற்றார். டெல்லி முதல்வர் அலுவலகத்துக்கு வந்த அவர் நேற்று முறைப்படி பொறுப்பேற்றார்....

‘அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் இன்று (செப்.24) பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமைச்சரவை மாற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார்.வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது பற்றி முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின்,...

குமரியில் கருத்து கேட்பு கூட்டத்திற்க்கு எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் தாது மணல் பிரித்தெடுக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இதனால் புற்றுநோய், தோல்நோய் அதிகமாக பரவும் என்று தெரிந்தும், அணு கனிம சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக நேற்று (செப்.,23) மனு அளிக்கப்பட்டது.

குமரியில் கருத்து கேட்பு கூட்டத்திற்க்கு எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் தாது மணல் பிரித்தெடுக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இதனால் புற்றுநோய், தோல்நோய் அதிகமாக பரவும் என்று தெரிந்தும், அணு கனிம சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக நேற்று (செப்.,23) மனு அளிக்கப்பட்டது.

சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; எம்எல்ஏ பரபரப்பு பேச்சு

மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஐஆர்இ மணல் ஆலையிலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1144 ஹெக்டேர் நிலங்கள் குத்தகை எடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியதாக வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலைமையில் புதுக்கடையில் நேற்று (செப்.,23) ஆலோசனை கூட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட மீனவ காங்கிரஸ் தலைவர் ஜெரோம் வரவேற்றார். கூட்டத்தில் கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜேஷ் குமார் எம்எல்ஏ பேசுகையில்: - குமரி மண்ணிலிருந்து மணல்...

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி: இரவு நேரத்தில் குடிக்காதீங்க.!

இரவில் மது குடிப்பது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறியுள்ளது. 36,000க்கும் மேற்பட்ட வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஒரு நாளின் இறுதியில் தூங்குவதற்கு முன்பாக மதுபானம் அருந்துவது மூளையின் செயல்பாட்டை கடுமையாக பாதிப்பது தெரியவந்துள்ளது. இரவில் மதுபானம் அருந்தாதவர்களுக்கு மூளையின் செயல்பாடு மேம்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்டம்; நல உதவிகளை வழங்கிய அமைச்சர்

குமரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் புதிய மின்னணு அட்டை வழங்குதல் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலஉதவி  வழங்கும் விழா தக்கலையில் நேற்று (23-ம் தேதி) நடைபெற்றது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார்மீனா முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் உட்பட பலர் பேசினர். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி...

குமரி நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழையின் போது அணைகள் நிரம்புவதை கண்காணித்து உபரி நீரை படிப்படியாக திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழையாறு செல்லும் சுசீந்திரம் பகுதியில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலை வாய்க்கால், ஓடைகள் குளங்கள் தூர் வார வேண்டும் என்று நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாழைகளை சாலையில் நட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடி செய்குதம்பி பாவலர் மண்டபத்தின் முன் பகுதியில் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சியினர் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி குமரி மாவட்ட நாம் தமிழ் கட்சி சார்பில் நூதன முறையில் நேற்று(செப்.22) போராட்டம் நடந்தது. அப்போது சாலையில் வாழை மரங்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில...

குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் நேற்று(செப்.22) வெளியிட்ட அறிக்கையில், மணவாளகுறிச்சியில் இந்திய அபூர்வ மணல் ஆலை மூலம் மணல்களிலிருந்து இல்மனைட், தோரியம் போன்ற கனிமங்களை பிரித்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை ஈட்டி வருகின்றது. இதன் கதிர்வீச்சால் அதிக கேன்சர் நோயாளிகளை கொண்ட முதல்மாவட்டமாக குமரி மாறி வருகிறது. இந்த நிலையில் கிள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுசுரங்கம் அமைத்து அரிய மணலை எடுத்துச் செல்ல ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!

நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...

குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது

குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...