Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் வருவதால் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,480 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைக்கிள்களை வழங்கி, முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார். மதுரவாயல் தொகுதி...

குமரியில் ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் தர்ணா

தமிழ்நாடு மாநில ஊரகவாழ். வாதார இயக்க பணியாளர்களுக்கு வருடாந்திர ஓய்வூதியம் வேண்டும், அனைத்துத் துறை அலுவலக வேலைகளை பார்க்க சொல்வதை தவிர்க்க வேண்டும், பணி பாதுகாப்பு மற்றும் பணியின் போது இறந்தவர்களுக்கு துறை சார்ந்த இழப்பீடு ஆகியவை வழங்குவது அவசியம், வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே என நிர்ணயிக்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நேற்று (செப்.,24)...

கல்லால் காவலளியின் தலையை பதம் பார்த்த திருடன்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஆம்பாடி பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு இங்கு ரப்பர் சீட் சேமிப்பு கூடாரம் உள்ளது. இந்த குடோனில் மணி (70) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் (செப்.,23) மாலை வழக்கம் போல் பணியில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கு வந்து குடோனுக்குள் நுழைந்து ரப்பர் சீட்டை திருட முயன்றார். சத்தம் கேட்டு மணி திருடனை மடக்கி பிடித்து விட்டார். ஆனால் திருடன் தன்னை விடுவித்துக் கொள்ள அருகில்...

மாற்றுத்திறனாளிகளின் வீடுகள் இடிப்பு; வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கச்சேரி நடை பகுதியை சேர்ந்தவர்கள் றாபி (43), ஸ்ரீ லதா (53). றாபிக்கு கிறிஸ்டினா ( 32) என்ற  மனைவி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீலதாவுக்கு திருமணமாகவில்லை. மாற்றுத்திறனாளியான சூரியதேவன் (47) என்ற தம்பியுடன் அவரும் வசித்து வருகிறார். இரண்டு குடும்பத்தினருக்கும் இவர்கள் நிலத்தை ஒட்டி உள்ள ஒருவருக்கும் நில சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று (செப்.,24) காலை சுமார் 50 பேர் கொண்ட...

விபத்தில் சிக்கி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை  அருகே குளப்புரம் பகுதியை  சேர்ந்தவர் வில்பிரட் சாம்ராஜ் (60). இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இவர் படத்தாலுமூட்டில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 14ஆம் தேதி இவர் படந்தாலுமூட்டில்  இருந்து மார்த்தாண்டத்திற்கு ஆட்டோவில் சென்றார். அப்போது திருத்துவபுரம் பகுதியில் வைத்து எதிரே வந்த வாகனமும் ஆட்டோவும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.  இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வில்பிரட் சாம்ராஜ் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை...

மனவேதனையில் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை அருகே உள்ள மேல்தாராவிளை பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி மகன் சிவகுமார் (வயது 46). பெயிண்டரான இவருடைய மனைவிராஜேஸ்வரி. 2 மகன் கள் உள்ளனர். சிவகுமார் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து சிவகுமார் மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம்...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி மகன் மெர்லின் (29) இவர் விவசாயத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்.இவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: - விவசாயத் துறையில் நான் பட்டம் பெற்றுள்ளேன். அரசு வேலைக்காக காத்திருந்த நிலையில் எனது ஊரை சேர்ந்த ரவி, நாகர்கோவில் இம்மானுவேல், சென்னை அருகம்பாக்கத்தை சேர்ந்த ஹரிஹரகுமார் ஆகியோரின் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக...

மூளைச்சாவு அடைந்த 2 ஆயிரம் பேர் தானமாக வழங்கிய 11,500 உறுப்புகளால் ஏராளமானோர் மறுவாழ்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தொடங்கப்பட்ட கடந்த16 ஆண்டுகளில் மூளைச்சாவு அடைந்த சுமார் 2 ஆயிரம் பேரிடம்இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் என மொத்தம் 11,411 உறுப்புகள் தானமாக பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு, ‘மறுபிறவி’ என்ற உறுப்புதான விழிப்புணர்வு குறுந்தகடு ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர்களின்...

இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி ரஷ்யா – உக்ரைன் தோழிகள் தமிழக கோயில்களில் வழிபாடு

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டி, அந்த நாடுகளைச் சேர்ந்த தோழிகள் 2 பேர், தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஷெனியா(27), உக்ரைனைச் சேர்ந்தவர் இலியானா(29). இவர்கள் இருவரும், இரு நாடுகளிடையே போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே தோழிகளாக உள்ளனர். அண்மையில் இந்தியா வந்த இருவரும், இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி தமிழக கோயில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக கும்பகோணம் பகுதியில் உள்ள திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கஞ்சனூர் சுக்கிரன், திருமணஞ்சேரி...

நிபா வைரஸ் பரவல்: தமிழக, கேரள எல்லையில் தொடரும் கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட சுகாதாரஅலுவலர் முரளி சங்கர் உத்தரவின் பேரில், தமிழக - கேரள எல்லையான ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் கூறும்போது, “தமிழகத்துக்கு வந்த யாருக்கும் இதுவரைநிபா காய்ச்சல் பாதிப்பு கண்டறி யப்படவில்லை. ஒன்பதாறு செக் போஸ்ட்டில் இதுவரை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!

நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...

குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது

குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...