Google search engine
Home 2024

Yearly Archives: 2024

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, வைஷாலி, குகேஷுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர்அணியும், மகளிர் அணியும் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தன. இதில் ஆடவர் அணியில் இடம் பெற்றிருந்த ஆர்.பிரக்ஞானந்தா, மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த அவரது சகோதரி ஆர்.வைஷாலி மற்றும் இந்திய அணியின் கேப்டன் நாத் ஆகியோர் ஹங்கேரியில் இருந்து ஜெர்மனிவழியாக விமானம் மூலம் செவ்வாய் கிழமை அதிகாலை 12.20...

மனித தவறுகளால் நிகழும் விமான விபத்துகள் 10 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்

மனித தவறுகளால் நிகழும் விமானவிபத்துகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். விமான விபத்துகளில் மனித காரணிகள் என்ற தலைப்பில் முதல் தேசிய பாதுகாப்பு கருத்தரங்கம் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் மோகன் நாயுடு இதுகுறித்து மேலும் கூறியதாவது: உலகளவில் விமான விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும் 80 சதவீத விபத்துகளுக்கு மனித தவறுகளே முக்கியகாரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் தற்போது 10 சதவீதம் அளவுக்கு...

லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்தால் சும்மா இருக்க மாட்டேன்: பிரகாஷ் ராஜுக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை

திருப்பதி லட்டு பிரசாதத்துக்காக கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது வாங்கப்பட்ட கலப்பட நெய்யில், விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரு தினங்களுக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப் பட்டதைப் பற்றி கேள்விப்பட்டு மிகவும் கவலை அடைந்தோம். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்’’...

உமிழ்நீர், சிறுநீர் கலந்த பழரசம் விற்றதாக புகார்: உ.பி.யில் உணவகங்களை முறைப்படுத்த முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

மேற்கு உ.பி.யின் ஷாம்லி மாவட்டம், சாலையோரக் கடை ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதில் பழரசம் விற்பனை செய்பவர் அதில் எச்சிலை துப்பி வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளர் ஆசீப்பை ஷாம்பி காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்குமுன், காஜியாபாத் பழரசக் கடை ஒன்றில் 15 வயது சிறுவன் பழரசத்தில் சிறுநீர் கலந்து விற்றதாகப் புகார் எழுந்தது. இச்சிறுவனை கடந்த செப்டம்பர் 13-ம் தேதி அப்பகுதி பஜ்ரங்தளம் தொண்டர்கள் கையும் களவுமாக...

நில முறைகேடு வழக்கை விசாரிக்க ஆளுநர் அனுமதித்தது சரியே: நீதிமன்ற உத்தரவால் சித்தராமையாவுக்கு பின்னடைவு

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கை விசாரிக்க ஆளுநர் அனுமதி அளித்தது சட்டப்படி சரியானது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமை யாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன‌. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட‌ நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை...

ஜம்மு காஷ்மீரில் 26 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று (செப்.25) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 239 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கியமான பங்களிப்பைச்...

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்ப்பாட்டம்: சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி

ட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2013-ம் ஆண்டுக்குபிறகு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழகஅரசு மாற்றியமைக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆன பிறகும் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி விரைந்து மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் பைக் டாக்சிக்கு தடை விதிக்கவேண்டும். ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவுக்கு...

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும், நிதியும் வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும் நிதியும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும், நிதியும் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களின் செயல்பாடுகளை முடக்குகிற கொள்கைகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.அதிகாரங்களை பரவலாக்குவதற்குப் பதிலாக மையப்படுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 73 மற்றும் 74-வது சட்ட...

பாலியல் புகாரில் உண்மை இல்லை என தேனி நர்சிங் மாணவி ஒப்புக்கொண்டார்: திண்டுக்கல் எஸ்.பி. தகவல்

தேனி நர்சிங் மாணவி ஒருவர், தன்னை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், திண்டுக்கல் எஸ்.பி. அ.பிரதீப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை...

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்க தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் பொதுமக் களுக்கும், மாணவர்களுக்கும் செஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு நடத்தியது. மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், ஹங்கேரி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!

நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...

குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது

குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...