Home 2024
Yearly Archives: 2024
தகாத வார்த்தை பேசி வக்கீலை அரிவாளால் வெட்டிய இளைஞர்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்றை கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). தற்போது இவர் நாகர்கோவில் நேசமணிநகர் ஹென்றி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார்.
சம்பவத்தன்று நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவர் சீனிவாசனுக்கு போன் செய்து தனது மகன் சுஜின் (32) தகராறு செய்து அடிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த வீட்டுக்கு சென்ற சீனிவாசனை, சுஜின் தகாத வார்த்தைகளால் பேசி தலை, கையில் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சீனிவாசன் நாகர்கோவிலில் உள்ள ஒரு...
குளச்சல் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க தீர்மானம்..!
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (செப்.,26) மண்டைக்காடு, பருத்திவிளையில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஎஸ்பி சந்திரா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில், தமிழ்நாடு வளர்ச்சிக்காக அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை பெற்று தந்த முதலமைச்சருக்கு இக்கூட்டத்தில் பாராட்டுகளும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு குளச்சல் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026...
மாநில தடகளப் போட்டி; கல்லூரி மாணவர் சாதனை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை மாணவர் ஜே. ஷாரோன் ஜஷ்டஷ் ஈரோட்டில் வ உ சி மைதானத்தில் வைத்து நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான 38 ஆவது இளையோர் U20 பிரிவில் நீளம் தாண்டுதல் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
மட்டுமின்றி இளையோர் தடகளப் போட்டியில் இதுவரை இருந்த சாதனையை முறியடித்து 7. 69 என்கிற புதிய சாதனையைப் படைத்தார். அத்தோடு தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய கமாண்டர் உயிரிழப்பு: லெபனான் பலி 569 ஆக அதிகரிப்பு
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய கமாண்டர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டது குறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்ரஹிம் முகமது கொபெய்ஸி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஹிஸ்புல்லாக்கள் அவர்களுக்கே உரித்த பாணியில் “தெற்கு பெய்ரூட்டில் ஜெருசலேமுக்கான வழியில் முன்னேறியபோது முகமது கொபெய்ஸி வீரமரணமடைந்தார்.” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் தரப்பிலோ கொபெய்ஸியுடன் இன்னும் இரண்டு முக்கியக் கமாண்டர்களையும் தங்கள் படைகள் வீழ்த்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு 569 ஆக அதிகரிப்பு: கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல்...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி மீண்டும் சந்திப்பு: விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பிக்கை
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மீண்டும் அவரை சந்தித்து பேசினார். விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலையில் ரஷ்யா சென்ற அவர்,...
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்: அதிபர் முன்னிலையில் பதவியேற்றார்
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, நாட்டின் 9-வது அதிபராக கடந்த 23-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், புதிய அரசு அமைவதற்கு ஏற்ப, பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையிலான அமைச் சரவையும் பதவி விலகியது. இதைத்...
லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை: 200 ராக்கெட்களை ஏவி ஹிஸ்புல்லா பதிலடி
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகுமிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில்சில குண்டுகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்ததால் 558 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித் துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும்...
கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: போலீஸ் விசாரணை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டின் அரிசோனாவில் அமைந்துள்ள டெம்பே நகரில் உள்ள ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் இது நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரண்டு தரப்பும் தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.
முன்னாள்...
எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி: ஐஓசி வெற்றி
95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஓசி - ஒடிசா அணிகள் மோதின.
இதில் ஐஓசி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சுமித் குமார் (18-வது நிமிடம்), ரகுநாத் (28-வது நிமிடம்), குஜிந்தர் சிங் (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 3-1...
அண்ணா பல்கலைக்கழக பாட்மிண்டன்: ஆர்எம்கே கல்லூரி சாம்பியன்
அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 பாட்மிண்டன் தொடர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் கவரபேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் வேல் மல்டி டெக் கல்லூரியை வீழ்த்தியது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆர்எம்கே கல்லூரி 18-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
அடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஆர்எம்கே கல்லூரி 21-11, 21-12 என்ற செட் கணக்கிலும், ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 21-3, 21-6...














