Google search engine
Home 2024

Yearly Archives: 2024

புனே, டெல்லி, கொல்கத்தா ஆராய்ச்சி மையங்களில் பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் புனேவில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரூ.20,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பலத்த மழை காரணமாக புனே அரசுநலத்திட்ட விழா ரத்து செய்யப்பட்டது. எனினும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக சில முக்கிய திட்டங்களை தொடங்கிவைத்தார்.சூப்பர் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற...

தமிழகப் பயணிகளுடன் குஜராத் பாவ்நகரில் வெள்ளத்தில் சிக்கிய சொகுசுப் பேருந்து

குஜராத் மாநிலம் பாவ்நகரில் தமிழக யாத்ரீகர்களுடன் சொகுசுப் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. சொகுசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பயணிகளை மீட்க ட்ரக் ஒன்று மீட்புக் குழுவினருடன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ட்ரக்கும் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து பயணிகளை வெளியேற்றி ட்ரக்கில் ஏற்றினர். மீட்புப் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் மேற்பார்வை செய்தார்.குஜராத்தில் கனமழை காரணமாக திடீரெ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தான் அந்த...

கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜையில் பெண்கள் பாதுகாப்பும் ஒரு கருப்பொருள் 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு துர்கை சிலை வைத்து வழிபடுவர். 10 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில், சமூக பிரச்சினைகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் கருப்பொருளாக இருக்கும். இவற்றை பிரதிபலிக்கும் வகையில் பந்தல், சிலைகள் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள துர்கா பூஜை விழாவுக்கான கருப்பொருளை விழா ஏற்பாட்டாளர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பையும் கருப்பொருளில்...

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ராகுல் காந்தியின் குடியுரிமையை பறிப்பது தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரிட்டிஷ் பாஸ்போர்ட் விசாரணையின்போது தான் ஒரு பிரிட்டன் குடிமகன் என்பதை பிரிட்டிஷ் அரசிடம் வெளிப்படுத்தியது குறித்து விளக்கம்...

காவல்துறை மரியாதையுடன் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம்: முதல்வர், தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் (86), வயது மூப்பு காரணமாக கடந்த 22-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. எஸ்றா சற்குணத்தின் மூத்த மகள் வெளிநாட்டில்...

குரூப் 2 முடிவுகள் டிசம்பரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசுத் துறைகளில் குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81,305 பட்டதாரிகள் எழுதினர். அதைத் தொடர்ந்து குரூப் 2 தேர்வுக்கான விடைக் குறிப்பு (கீ ஆன்சர்) செப்டம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மீதான ஆட்சேபனைகளை தெரிவிக்க செப்.30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று...

மருத்துவ ஆராய்ச்சிக்கான அரசின் உதவித்தொகை ரூ.1 கோடியாக உயர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

மருத்துவ ஆராய்ச்சிக்கான உதவித்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ‘மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு’ புத்தகத்தை வெளியிட்டார்.அதைத் தொடர்ந்து, மருத்துவ ஆசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு...

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பம் மீது நாளைக்குள் பரிசீலனை: போலீஸாருக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்.6-ம் தேதியன்று ஆர்எஸ்எஸ் சார்பில் 58 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா, ஜி.கார்த்திகேயன், வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர், கடந்தாண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடத்தப்பட்டது....

செந்தில் பாலாஜி முன்பு துரோகி, இப்போது தியாகியா? – தமிழிசை, சீமான் விமர்சனம்

முதல்வருக்கு, செந்தில் பாலாஜி முன்பு துரோகியாக இருந்தார், அவரது கட்சிக்கு வந்தவுடன் இப்போது தியாகியாகி விட்டாரா என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக விஜய பிரபாகரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகியாக இருந்தவர், தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா? அவர் என்ன சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டா சிறைக்கு சென்றார்?...

நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மறு வரையறை செய்திடவும், கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை பாது காத்திட வேண்டியும், வருமானவரி உச்ச வரம்பை ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டியும், தினசரி ஊதிய முறையை ரத்து செய்திடவும், அரசு துறைகளை தனியார் மயப்படுத்துவதை நிறுத்திட வேண்டும், அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், ஒப்பந்த தினக்கூலி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!

நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...

குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது

குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...