Home 2024
Yearly Archives: 2024
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலும் செல்கிறது. இதில் நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை முதல் கணபதியான்கடவு ஆற்றுப்பாலம் வரையில் சாலை மிகவும் அகலம் குறைவாக காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே சாகலையை அகலப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கிளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசு சம்பந்தப்பட்ட பகுதியில் சாலை இரு புறமும் நில ஆர்ஜிதம்...
கொலை முயற்சி வழக்கு; குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சாந்தி என்பவரது மகன் டேவிட். கடந்த 2015 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக 7 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாந்தி முக்கிய சாட்சி ஆவார். 14- 2 - 2017 அன்று சாந்தி தனது மகள் சகாய லதா உடன் வைத்தியநாதபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோட்டார் பகுதியை சேர்ந்த...
நாடாளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டதால் ஓய்வூதியத்தை இழக்கும் 85 இலங்கை எம்.பி.க்கள்
இலங்கை நாடாளுமன்றம் 10 மாதங்களுக்கு முன்னதாகவே கலைக்கப் ட்டதால் முதல்முறையாக தேர்வான 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர். இலங்கையில் கடந்த செப்.21-ம் தேதி நடைபெற்ற 9-வது அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யின்தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்று கடந்த திங்கள்கிழமை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அதேகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய, இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிய இன்னும் 10...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தலைவர் உயிரிழப்பு – லெபனானில் பலி 700-ஐ கடந்தது!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கள் கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன.
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இலங்கை வீரர் தினேஷ் சந்திமால்
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது.
காலே நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. பதும் நிசங்கா 1 ரன்னில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால், திமுத் கருணரத்னேவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது....
மக்காவு ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் ஸ்ரீகாந்த்
மக்காவு ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்டைச் சேர்ந்த ஆயுஷ் ஷெட்டியுடன் மோதினார். இதில் கிடாம்பி காந்த் 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.கால் இறுதி சுற்றில் ஹாங்காங்கின் லாங் அங்கஸுடன் மோதுகிறார் ஸ்ரீகாந்த். மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி,...
4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து – ஆஸி. இன்று மோதல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் இரு ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 68 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்தது. இந்நிலையில் இரு அணிகளும் 4-வது ஒருநாள் போட்டியில் இன்று மாலை 5 மணி அளவில்...
அண்ணா பல்கலைக்கழக மண்டல போட்டி: மகளிர் வாலிபால், கூடைப்பந்தில் ஆர்எம்டி கல்லூரி அணி சாம்பியன்
கவரைப்பேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு வாலிபால் இறுதிப் போட்டியில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி - ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் ஆர்எம்டி கல்லூரி அணி 15-25, 25-16, 25-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதேபோன்று மகளிருக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி அணியும், வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணியும் விளையாடின. இதில் ஆர்எம்டி கல்லூரி அணி...
எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி: இந்தியன் ரயில்வே – ஒடிசா அணிகள் அரை இறுதியில் நாளை பலப்பரீட்சை
95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து ஐஓசி, ஒடிசா ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.இந்நிலையில் நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஐஓசி-போபால் அணிகள் மோதிய ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில்...
திருமலைக்கு நாளை ஜெகன்மோகன் வருகை: சுவாமி நம்பிக்கை ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட கோரிக்கை
முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை திருமலைக்கு வர உள்ளார். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து...














