கவரைப்பேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு வாலிபால் இறுதிப் போட்டியில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி – ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் ஆர்எம்டி கல்லூரி அணி 15-25, 25-16, 25-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதேபோன்று மகளிருக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி அணியும், வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணியும் விளையாடின. இதில் ஆர்எம்டி கல்லூரி அணி 30-14 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆர்எம்கே கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் கிஷோர் பரிசுகளை வழங்கினார்.