Home 2024
Yearly Archives: 2024
‘மோசமான பாசாங்குத்தனம்’ – ஜம்மு காஷ்மீர் குறித்த பாக்., பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அவரின் பேச்சு ‘பாசாங்குதனத்தின் மோசமான நிலை’ என்று சாடியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வில் நடந்த பொது விவாதத்தின் போது வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசியதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஐநா பொதுச் சபையில் இந்தியாவின் பிரதிநிதி பவிகா கூறியதாவது: வருந்தத்தக்க வகையில் இந்தச் சபை ஒரு கேலிக்கூத்தான விஷயத்தைக் கண்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின்...
பிஹாருக்கு கனமழை, வெள்ள அபாய எச்சரிக்கை: மாவட்டங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
இந்திய வானிலை ஆய்வு மையம் பிஹாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஹாரின் மேற்கு மற்றும் கிழக்கு சம்பரான், சீதாமர்ஹி, ஷீயோகர், முசாபர்பூர், கோபல்கஞ்ச், சிவான், சரண், வைஷாலி, பாட்னா, மதுபான மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது...
பிரசாத தரத்தை உறுதி செய்ய கோயிலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி: தமாகா வலியுறுத்தல்
“தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் தமிழக அரசு அந்தந்த கோயில்களுக்கென்றே ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை நியமித்து பிரசாதங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை தமிழக இந்துசமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும்,” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும்...
விழுப்புரம் விவசாயி தற்கொலை: சம்பந்தப்பட்ட 23 பேரை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ், தமது நிலத்தை பறிக்க அரசியல் கட்சி ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, அதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து...
தமிழகத்தில் 6 மாதங்களில் 2,000 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தியாகி சாதனை
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: அணைகளில் உள்ளநீர் இருப்பை பொருத்து நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்தஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2,009 மெகாவாட்நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 50 சதவீத மின்னுற்பத்தி இலக்கை அடைந்துவிட்டோம். தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் இந்த இலக்கை எட்ட முடிந்தது.
குந்தா, காடம்பாறை, திருநெல்வேலி, ஈரோடுஆகிய 4 முக்கிய மின்னுற்பத்தி வட்டங்களில் 2,321.90 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. இதில் இருந்து தினசரி 7 மில்லியன் யூனிட் முதல் 10 மில்லியன்...
திருப்பதி லட்டு விவகாரம்: கரூரில் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிட்ட இந்து முன்னணியினர்
கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு சர்ச்சை தொடர்பாக கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிடும் நிகழ்வு இன்று (செப். 28) நடைபெற்றது.
கரூர் ரயில்வே குடியிருப்பில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு இந்து முன்னணி கரூர் மாநகரத் தலைவர் கணேசன் தலைமையில் நகரச்செயலாளர் காமேஷ்வரன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலையில் காலை 8 மணிக்கு ஆஞ்சநேயரிடம் முறையிட்டு 11 தேங்காய்களை உடைத்து முறையிட்டனர். இதில் நிர்வாகிகள், இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி 6 சாலை,...
“ரூ.10 லட்சம் கோடி+ முதலீடுகள் ஈர்ப்பு; 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு” – முதல்வர் ஸ்டாலின் தகவல்
“இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில். 9,000 கோடி ரூபாய் முதலீடு...
வாகன தணிக்கையில் அதிரடி காட்டிய குமரி போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (செப்.,27) போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளுக்கு மீறி வாகன ஓட்டிய இளைஞர்களுக்கு அபராதம் விதித்து, அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கி இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
பள்ளி மாணவன் மீது மோதிய போலீஸ் வாகனம்: விசிக மனு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சுதீஷ் என்ற மாணவன் மீது போலீஸ் வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் சிறுவனின் காலில் முறிவு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவனின் தாய் தந்தையுடன் வந்து நேற்று (செப்.,27) மனு அளித்தனர்.
நாகர்கோவில்: குழந்தையை மீட்டுத் தர தாய் தர்ணா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அதிகாரிகள் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (செப்.,27) குழந்தையை மீட்டு தரக்கேட்டு தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.














