Home 2024
Yearly Archives: 2024
சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது: அமெரிக்க அதிகாரிகள் தகவல்
சீன கடற்படையில் 234 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன. அந்த நாட்டு கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில்12 நீர்மூழ்கிகள் அணு சக்தியில் இயங்கக்கூடியவை.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கடலுக்கு அடியில் பாறையில் மோதியது. இதில் மொத்தம்55 பேர் உயிரிழந்தனர். இந்தவிபத்து, உயிரிழப்பு குறித்து சீனஅரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த சூழலில் சீனாவின் புதியஅணு சக்தி நீர்மூழ்கி முழுமையாக கடலில் மூழ்கி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சீனாவின்...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும்: பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்தல்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இரு ஆண்டுகள் மட்டும் பதவி வகிக்கும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு குறைந்த செல்வாக்கு மட்டுமே உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ...
யாழ்ப்பாணம் முன்னாள் ஆட்சியர் வடமாகாண ஆளுநராக நியமனம்: இலங்கை அதிபர் நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி
அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய அதிபரின் இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம்ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி...
ஹிஸ்புல்லா தலைவரை குறிவைத்து பெய்ரூட்டை புரட்டிப்போட்ட இஸ்ரேல்: நடந்தது என்ன?
ஹில்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை கடுமையான தாக்குதலை நடத்தியது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் துவம்சம் செய்தது.
ஆனால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்துக்குப் பின்னர் ஹிஸ்புல்லா ஊடகப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஹஜ் முகமது அஃபீஃப், “நஸ்ரல்லாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நஸ்ரல்லா இருப்பதாக நினைத்து இஸ்ரேல் குறிவைத்த இலக்கில் அவர்...
ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரிட்டன் பிரதமர் ஆதரவு
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
ஐநா பொதுச்சபையில் வியாழன் (செப். 26) அன்று உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர், “ஐநா பாதுகாப்பு அவை விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசியல் காரணமாக அது முடக்கப்படக்கூடாது. ஐநா சீர்திருத்தப்பட வேண்டும். அதிக பிரதிநிதித்துவத்துடன், அதிகம் பதிலளிக்கக்கூடியதாக அது திகழ வேண்டும்.
நியாயமான விளைவுகளுக்கு மட்டுமல்ல, அவற்றை அடைவதில் நியாயமான பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் உருவாக்குவோம். ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இது பொருந்தும். அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத்...
“பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளது.
நஸ்ரல்லாவின் மரணத்தை அறிவித்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி லெப்.ஜெனரல்,...
மக்காவு பாட்மிண்டன்: அரை இறுதியில் ட்ரீசா-காயத்ரி ஜோடி
மக்காவு பாட்மிண்டன் தொடரில்இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.
மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய் - லோன் ஜிஹ் யுன் ஜோடியை வீழ்த்தியது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடி, அரை இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வதுஇடத்தில் உள்ள...
பிரசாதங்களை கோயில் பூசாரிகளின் மேற்பார்வையில் தயாரிக்க வேண்டும்: ராமர் கோயில் தலைமை பூசாரி வலியுறுத்தல்
திருப்பதி ஏழுமலையான் கோயில்பிரசாதமான லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா போன்ற இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் பிரசாதங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று பலர் குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர்கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் நேற்று கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் கோயில் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட...
புதுக்கோட்டை விவசாயி கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை
அரிமளம் அருகே விவசாயி கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரி மளம் அருகேயுள்ள ஆணைவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி(65). அதே ஊரைச் சேர்ந்தவர் சு.பூசையா(45). அங்குள்ள அடிச்சிஅம்மன் கோயிலை யார் முன்னின்றுகட்டுவது என்பது தொடர்பாக இவர்களிடையே தகராறு இருந்தது. மேலும், காந்திக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் விநியோகத்துக் காக அமைக்கப்பட்ட மின் மோட் டாரை தனது விருப்பத்துக்கு ஏற்பபயன்படுத்தி வந்த பூசையா, பொதுப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஜல்லிக் கற்களையும் கொட்டி வைத்திருந்தாராம்....
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் இன்று (சனிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேரும், ஒரு போக்குவரத்துக் காவலரும் காயம் அடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குல்காம் மாவட்டத்தின் தேவசார் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படை வீரர்கள் தொடங்கிய நிலையில் இந்த துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “துப்பாக்கிச் சண்டையின் போது திசைமாறி வந்த துப்பாக்கித் தோட்டாவால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (போக்குவரத்து) மும்தாஜ் அலிக்கு லேசான...














