Home 2024
Yearly Archives: 2024
அரசியல் ரீதியாக பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை சத்தியமூர்த்தி பவனில், இந்திரா தோழமை சக்தி இயக்கத்தின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திரா காந்தி பெயரில் செயல்படும் இந்திரா தோழமை சக்தி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள பெண்கள் அரசியலிலும், கட்சியிலும் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகிறது.தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் நலன்...
மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 1.82 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை
மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 விபத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த விபத்துக்களில் 10,536 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 10,589விபத்துக்களில் 11,106 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
5 சதவீத உயிரிழப்பு தடுப்பு: தமிழக காவல்துறையின் விழிப் புணர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின்...
“ஒரே குடும்பத்தில் முதல்வர், துணை முதல்வர் புதிதல்ல” – கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
ஒரே குடும்பத்தில் பலர் அரசியல் பதவிக்கு வருவது புதிதல்ல என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி கடைவீதியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு குடும்பத்தில் இருந்து பலர் அரசியல் பதவிக்கு வருவதுபுதிதல்ல. பல மாநிலங்களில், பல கட்சிகளில் நிகழ்ந்துள்ளது. அதுபோல, ஒரே குடும்பத்தில் ஒருவர் முதல்வராவதும், மற்றொருவர் துணை முதல்வராவதும் புதிதல்ல.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சரவையில் யாரை...
மணல் எடுக்க எதிர்ப்பு.. மார்த்தாண்டன்துறை மீனவர்கள் பேரணி
குமரியில் மனவளக்குறிச்சி ஐஆர்இஎல் மணல் ஆலை நிறுவனம் குமரி மேற்கு மாவட்டத்தில் ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அரிய வகை மணலை அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன் துறை புனித வியாகுல அன்னை ஆலய பங்கு பேரவை சார்பில் நேற்று(செப்.29) மாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு பங்கு பணியாளர் சுரேஷ் பயஸ் தலைமை வகித்தார். பங்கு பேரவையினர் முன்னிலை வகித்தனர். பேரணி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு சூசைபுரம் காலனி, மேட...
திருவட்டார் ஊராட்சி உதவியாளர் திடீர் மாயம்.. போலீசார் விசாரணை
திருவட்டார் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் அரிச்சந்திரன் மகன் சுஜின் (29). இவர் திருவட்டார் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சுஜினுக்கு சற்று மன நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி சுஜினை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே சம்பவ தினம் அலுவலகத்திற்கு பணிக்கு சென்ற சுஜின் பின்னர் வீடு திரும்பவில்லை....
நடந்து சென்ற எல்கேஜி மாணவி மீது டெம்போ மோதல்
திருவட்டாறு அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் பெர்ஜின் குமார் (33). இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அஹானா, சிதறால் பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சிறுமியின் தாத்தா பிரான்சிஸ் டீக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி மாலை சிறுமி அஹானா தனது தாத்தா பிரான்சிஸ் நடத்தும் டீக்கடைக்கு சென்று விட்டு அப்பகுதியில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டெம்போ ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுமி மீது...
சுசீந்திரம் அம்மன் ஊர்வலம்.. துவக்கி வைத்த மத்திய அமைச்சர்
நவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு, பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வது பாரம்பரிய வழக்கம்.
இதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் இன்று (30ம் தேதி) காலை சுசிந்திரம் கோயிலில் இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், எம்ஆர் காந்தி எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில்...
‘லப்பர் பந்து’ மூலம் 2-வது இன்னிங்ஸ்: சுவாசிகா விஜய் மகிழ்ச்சி
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய படம், ‘லப்பர் பந்து’. இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் சுவாசிகா விஜய் கூறும்போது, “தமிழில் 6 வருடத்துக்கு முன் முதல் படம் பண்ணினேன். அப்போது பல கனவுகளுடன் இங்கே வந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. கேரளாவுக்குத் திரும்பிவிட்டேன். இத்தனை வருடங்களுக்குப்...
சூர்யா பட ஷூட்டிங்கை முடித்தார் பூஜா ஹெக்டே
நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜெயராம், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் 44-வது படமான இதன் படப்பிடிப்பு அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் ஊட்டியில் நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பூஜா ஹெக்டே. இதற்காகப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் தெரிவித்துள்ளார்....
திரை விமர்சனம்: மெய்யழகன்
சொத்துப் பிரச்சினையில் பூர்வீக வீடு சொந்தத்துக்குச் சென்று விட இதற்கு மேல் அங்கு வாழக் கூடாது என்று , தஞ்சாவூரின் நீடாமங்கலத்தில் இருந்து, தனது மனைவி, மகன் அருள்மொழி (அரவிந்த்சாமி) ஆகியோருடன் சென்னைக்கு இடம் பெயர்கிறார் அறிவுடை நம்பி (ஜெயப்பிரகாஷ்). இருபது வருடமாக ஊருக்குச் செல்லாமல் இருக்கும் அவர்களுக்குள் கோபம் இருந்தாலும் ஊர் பாசம் ஊறிக் கிடக்கிறது. இந்நிலையில் தன் மீது பாசம் கொண்ட சித்தப்பா மகள் புவனா (சுவாதி) திருமணத்துக்காக, சொந்த ஊர் செல்ல வேண்டிய கட்டாயம் அருள்மொழிக்கு. தங்கையை சந்தித்துவிட்டு...














