Google search engine
Home 2024

Yearly Archives: 2024

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்: எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி எச்சரித்துள்ளார். இந்தியா முழுவதும் 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி நர்சிங், 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்சிங், 2 ஆண்டுகள் கொண்ட சான்றிதழ் உதவி செவிலியர் (ANM - Auxiliary Nurse Midwifery)படிப்புகள் உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி (10 2) கல்வித் தகுதியாக உள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக அங்கீகரிக்கப்படாத செவிலியர்...

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கம் மனு

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலமையில், பேரவை தலைவர் தாடி ம.ராசு, பொருளாளர் அப்துல் அமீது ஆகியோர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. இதை அண்ணா தொழிற்சங்கம் ஏற்கவில்லை. இப்போது 4 ஆண்டுகளை கடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை போக்குவரத்து...

உதயநிதிக்கு அமைச்சரவையில் 3-ம் இடம்; துணை முதல்வருக்கான செயலர்கள் விரைவில் நியமனம்

புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதல்வருக்கான செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். மேலும் அமைச்சரவையில், வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டி.மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதுதவிர, க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகிய அமைச்சர்களின் துறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு...

குமரி: சரக்கு ரயிலில் வந்த 1300 டன் நெல் மூட்டை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகம், வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலமாக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து 1300 டன் நெல் மூட்டைகள் நேற்று (செப்.,30) சரக்கு ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகளை குடோன்களுக்கு லாரிகளில் தொழிலாளிகள் ஏற்றி சென்றனர்.

கலைஞரிடம் கத்திய காட்டி மிரட்டிய இளைஞர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கலைஞர் (வயது 46), தொழிலாளி. இவர் நேற்று (செப்.,30) கோட்டார் ரெயில் நிலையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த அனிஷ் (23), பரசுராமன் (24), ராதாகிருஷ்ணன் (27) ஆகியோர் கலைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 150-ஐ பறித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அனிஷ் உள்பட 3 பேரையும் கோட்டார் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் அனிஷ் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி: வியாபாரிகளிடம் கல்லூரி மாணவர்கள் நூதன மோசடி

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு நேற்று (செப்.,30) தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கலை கல்லூரியை சேர்ந்த 21 மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்தனர். அவர்கள் கடற்கரைக்கு சென்று கட்டண முறையில் போட்டோ எடுக்கும் போட்டோகிராபர்களிடம் போட்டோ எடுக்க கூறி, குழுவாகவும் தனித்தனியாகவும்  ஏராளமான போட்டோக்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலர் வியாபாரிகளிடம்  சென்று பொருள்களை வாங்கி கொண்டனர். ஆனால் பணத்தை ஜி பே மூலம் அனுப்புவதாக கூறிவிட்டு, செலுத்தவில்லை. அதிர்ச்சியடைந்த போட்டோகிராபர்கள் மற்றும் வியாபாரிகள் 21 கல்லூரி மாணவர்களையும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் மாணவர்கள்...

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இந்திரா நகர் பகுதியில் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று (30-ம் தேதி)  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் இரணியல் கோணம் இந்திரா நகர் பகுதியில் கடந்த நூற்றாண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக சிலரது தூண்டுதலின் பேரில் எங்களது வாழிடத்தை விட்டு அகற்ற முயல்கின்றனர். எங்களது குடியிருப்புகளை அகற்றினால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை...

“காந்தி சிலை உடைத்தவரை கைது செய்யா விட்டால் மறியல்”

கன்னியாகுமரி மாவட்டம் விளவகோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட்நேற்று (செப்.,30) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -.விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட  மருதங்கோடு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை செப்டம்பர் மாதம் 8-ம் தேதி உடைக்கப்பட்டது. அந்த சிலை உடைத்தவர்களை கைது செய்ய புகார் அளிக்கப்பட்டது. செப்டம்பர் 17ஆம் தேதி வரை சம்மந்தபட்டவர்களை கைது செய்ததால் அன்று மாலை கழுவன் திட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்துடன் சாலை  மறியல் நடத்த இருந்தோம். ஆனால் காவல் கண்காணிப்பாளரின்...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் தடுக்க வேண்டும்: அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் அரசு தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார். புதுக்கோட்டையில் மாவட்ட வர்த்தகக் கழகத்தின் பொன்விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விக்கிரமராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து, மாதந்தோறும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும் என்பதை...

பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும்: திருமாவளவன் கருத்து

பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் அவரிடம், தமிழகத்தில் துணை முதல்வராக பட்டியலினத்தவரை நியமிக்கும் சூழல் இருக்கிறதா, அதற்கான வாய்ப்புகள் அமையுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:ஆளுங்கட்சியின் சுதந்திரம், உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திமுகவின் முக்கிய தலைவர்களின் அனுமதியுடன்தான் இந்த முடிவை எடுத்திருக்க முடியும். இதில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது. பொதுவான முறையில் எளிய மக்கள், பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!

நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...

குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது

குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...