Home 2024
Yearly Archives: 2024
கன்னியாகுமரி: நாளை மறுநாள் மின்தடை.. உஷார் மக்களே
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி, ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரவிளை ஆகிய உப மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
எனவே, நாளை மறுநாள்(அக்.4) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாகர்கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம். எஸ். ரோடு, காலேஜ்ரோடு, கோர்ட்டு ரோடு, கே. பி. ரோடு, பால் பண்ணை, நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், கோதை கிராமம், அப்டா மார்க்கெட், தம்மத்துகோணம், அனந்தநாடார்குடி, அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்பு...
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று ( 1 -ம் தேதி) துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் எஸ். எல். பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ....
குமரி காந்தி மண்டபத்தில் இன்று நண்பகல் விழும் சூரிய ஒளி
மகாத்மா காந்தி இறந்த போது அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டு, பின்னர் அவரது அஸ்தி கலசம் ஒன்று 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கன்னியாகுமரி கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கடற்கரையில் வைக்கப்பட்ட பின்பு முக்கடல் சங்கமத்தில் அஸ்தி கரைக்கப்பட்டது.
கடற்கரையில் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் பின்னர் காந்தி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ம் தேதி நண்பகல்...
பெண் மருத்துவர் புகைப்படத்தை நீக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமூக வலைதளங்களில் இருந்து கொல்கத்தா பெண் மருத்துவரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனிடையே மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது...
குறைந்த விலைக்கு ஏ.ஆர்.டெய்ரியிடம் நெய் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? – திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதான குற்றச்சாட்டில் உண்மை நிலவரம் என்ன என்பதை ஆராய, ஆந்திர அரசு ‘எஸ்ஐடி’ என்னும் சிறப்பு விசாரணைக் குழுவை குண்டூர் ஐஜி சர்வேஷ்ட்ர திரிபாதி தலைமையில் அமைத்துள்ளது.
இந்தக் குழுவில், விசாகப்பட் டினம் டிஐஜி கோபிநாத் ஜெட்டி, கடப்பா எஸ்பி. ஹர்ஷவர்தன் ராஜுஉட்பட மொத்தம் 9 பேர் இடம்பெற்று உள்ளனர். இவர்கள் 3-வது நாளாகநேற்றும் விசாரணை நடத்தினர்.அப்போது திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவை சந்தித்து, ஏ ஆர் டெய்ரி நிறுவனத்துக்கு...
போலி பாஸ்போர்ட் மூலம் தங்கிய பாகிஸ்தானியர் குடும்பம் பெங்களூருவில் கைது
மத்திய உளவுத்துறை பெங்களூருவில் உள்ள ஜிகனியில் பாகிஸ்தானியர் ஒருவர் குடும்பத்துடன் வசிப்பதாக பெங்களூரு போலீஸாருக்கு தகவல் அளித்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 48வயதான பாகிஸ்தானியர் ஒருவரும், அவரது மனைவி, மாமனார்,மாமியார் ஆகியோர் சிக்கினர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், 48 வயதான அந்த நபரின்உண்மையான பெயர் ரஷித் அலிசித்திக் என தெரியவந்தது. பாகிஸ்தானில் காராச்சியை சேர்ந்த இவர்,கடந்த 2013-ம் ஆண்டு வங்கதேசத் தில் உள்ள டாக்காவுக்கு சென்று தன் காதலியை திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்து தனது...
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உத்தர பிரதேசத்தில் ஏழரை ஆண்டுகளில் 7,000 கிரிமினல்கள் கைது
உத்தர பிரதேசத்தில் ஏழரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 49 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்றுமாநில அதிரடிப்படை யான எஸ்டிஎப் தெரிவித்துள்ளது.
உ.பி.யில் கடந்த மார்ச் 2017-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது உ.பி.யில் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல், வினாத்தாள் கசிவு,சைபர் குற்றங்கள், நில அபகரிப்புஎன குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாக புகார் நிலவியது. சட்டம்ஒழுங்கும் மோசமாக இருந்தது.இதையடுத்து மாநிலம் முழுவதும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துமாறு எஸ்டிஎப் எனப்படும் அதிரடிப்படைக்கு உ.பி.முதல்வர்...
முஸ்லிம்கள் அதிகரித்து விட்டதால் உ.பி.யில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்: சமாஜ்வாதி எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை
உ.பி.யின் அம்ரோகா தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மெகபூப்அலி. முன்னாள் அமைச்சரான இவர், பிஜ்னோரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “உ.பி.யில் பாஜக ஆட்சிமுடிவுக்கு வரும். மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர் என்பதை நாட்டை எரித்து வருவோர் உணர வேண்டும். மக்களவைத் தேர்தலில் மக்கள்தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2027 சட்டப்பேரவை தேர்தலில் உங்கள் ஆட்சி முடிவுக்கு வரும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்" என்றார். மெகபூப் அலியின் இந்தப் பேச்சு...
பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து செல்லும் போலீஸார்: காவல் வாகன விளக்குகளை எரியவிட்டவாறு செல்லவும் உத்தரவு
குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், சென்னை போலீஸார் பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம்தேதி பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை போலீஸார் முடுக்கிவிட்டனர். குறிப்பாக ரவுடிகளை ஏ, ஏ-பிளஸ், பி, சி என 4 பிரிவாக வகைப்படுத்தி, தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள்...
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் கொண்டாட்டம்: மொழிபெயர்ப்பாளர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பல்வேறு மொழிபெயர்ப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திசைதோறும் திராவிடம் (தமிழ் இலக்கிய மற்றும் தமிழக வரலாற்று நூல்கள் மொழிபெயர்ப்பு), முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம் (மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு), இளந்தளிர் இலக்கிய திட்டம் (குழந்தைகளுக்கான இலக்கியங்களை தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதி வெளியிடுதல் மற்றும் அந்நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்), தமிழில் குழந்தைகளுக்கான உலக இலக்கியங்கள்...














