Home 2024
Yearly Archives: 2024
விமான விபத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல் 56 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு: சோகம் கலந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
இமாச்சலப் பிரதேசத்தின் ரோதங் கணவாய் பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற பயிற்சி மைய வீரர்கள் கடந்த 2003-ம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது விமானப்படை விமா னம் ஒன்றின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்தனர். அது கடந்த 1968-ம் ஆண்டு விபத்துக்குள்ளான விமானப்படையின் ஏஎன்12 ரக போக்குவரத்து விமானத்தின் பாகம் என்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது நடந்த...
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து திருப்பதியில் சிறப்பு விசாரணை குழுவின் ஆய்வு தற்காலிகமாக நிறுத்தம்
திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தியது குறித்து விசாரிக்க ஆந்திர அரசு ஒரு சிறப்பு விசாரணை குழுவினை (எஸ்ஐடி) குண்டூர் டிஐஜி சர்வ ஸ்ரேஷ்ட திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பதிக்கு வந்து விசாரணையை தொடங் கினர். இதில் பல விஷயங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில்கலப்பட நெய் வழக்கை விசாரித்தஉச்ச நீதிமன்றம், கடவுள்களை அரசியலுக்கு இழுக்க வேண்டாம்என ஆந்திர அரசுக்கு கண்டனம்தெரிவித்தது. மேலும், எஸ்ஐடிதனது விசாரணையை,...
நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
ஜன அதிகார சங்கரஷ சங்கத்தின் துணை தலைவர் ஆதர்ஷ் அய்யர் தாக்கல் செய்த மனுவின்பேரில், பெங்களூருவில் மக்கள் பிரதி நிதிகள் மீதான வழக்கை விசாரிக் கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 28- தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து திலக் நகர் போலீஸார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
இந்திய பெண்ணை மணந்த இலங்கை நபரை நாடு கடத்த ஐகோர்ட் தடை
இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையை சேர்ந்த நான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சிவசக்தியை திருமணம்செய்ய முடிவு செய்தேன்.
ஆனால், நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதால், எனது திருமணத்தை பதிவு செய்யமுடியவில்லை. எனினும், சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், எனது 3 மாத விசாகாலம் முடிவடைந்ததால், காலநீட்டிப்புக்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், எனது திருமணம் பதிவு...
முதல்வர் ஸ்டாலின் மூலவர், உதயநிதி உற்சவர்: அமைச்சர் ரகுபதி கருத்து
தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அமைச்சரவை மாற்றம் தற்போது அடிக்கடி நடப்பதில்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஆட்சியில், எந்த அமைச்சர் பதவியில் இருக்கிறார், யார் இல்லை என்பதை செய்தியைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அமைச்சர்கள் அச்சத்துடன் இருந்தனர். ஆனால், திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படும் சூழலை முதல்வர் உருவாக்கியுள்ளார்.
மது ஒழிப்பை நாடு முழுவதும் கொண்டுவந்தால், தமிழகத்திலும் அதை செயல்படுத்த திமுகவுக்கு எந்த தயக்கமும் இல்லை. மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாமல், தமிழகத்தில்...
காந்தி ஜெயந்தியையொட்டி இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்-1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்-3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் மற்றும் எப்எல்-3 (ஏ),எப்எல்-3(ஏஏ) உரிமம் கொண்டபார்கள் அனைத்தும்...
சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 47 பேர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி.,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்...
தஞ்சை பெரிய கோயில் அருகே சாலை அமைக்க அனுமதியா? – உயர் நீதிமன்றம் அதிருப்தி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சின்ராஜ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை பெருவுடையார் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திரன் கோயில் கடந்த40 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டும், பூஜைகள் நடைபெறாமலும் உள்ளது.
மேலும், பராமரிப்புக் குறைபாடு காரணமாக கோயில் சேதமடைந்துள்ளது. எனவே, இந்திரன் கோயிலை திறந்து தினமும் பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா...
மகாத்மா காந்தியின் பிட்னஸ் ரகசியம் தெரியுமா?
காந்தி தன் உணவு முறை குறித்து ஒரு புத்தகத்தில், “100 கி முளைக்கட்டிய கோதுமை, பாதாம் 100 கி, கீரை 100 கி, எலுமிச்சை, தேன் ஆகியவற்றை காலை 11 மணிக்கு உணவாக எடுத்துக் கொள்வேன். அடுத்த வேளை உணவை மாலை 6:15 மணியளவில் சூடான நீர், எலுமிச்சை, தேனை எடுத்துக் கொள்வேன்" என எழுதியிருக்கிறார். 1911-ம் ஆண்டு முதல் உப்பு இல்லாத உணவை சாப்பிட தொடங்கிய அவர், மருத்துவரின் அறிவுரை காரணமாக 1920-ல் மீண்டும் உப்பு சேர்த்து சாப்பிட தொடங்கினார்.
போதையில் ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் மகன் வினோத் (26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத் ரப்பர் மரங்களை பாரம் ஏற்றும் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம்(செப்.30) இரவு பூலங்கோடு என்ற குளத்தில் இருந்து தண்ணீர் பாய்ந்து செல்லும் ஓடை அருகில் வினோத் மதுபோதையில் நின்றுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். இந்த நிலையில் நேற்று ( 1 -ம் தேதி) காலையில் அந்த ஓடையில் தண்ணீரில்...














