Home 2024
Yearly Archives: 2024
நாகர்கோவிலில் 133 மது பாட்டில்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜா மற்றும் போலீசார் நேற்று நாடான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திருட்டு மது விற்பனையில் ஈடுபட்டதாக வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த லிப்பன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 133 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மெக்கானிக்குக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராய் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள சந்திப்பில் டி. வி. , மிக்ஸி போன்ற எலக்ட்ரிக் பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மணிக்குமார் (39). மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக அந்த வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த மணிக்குமார் தர்மராயின் கடைக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும்...
நாகர்கோவிலில் டீக்கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு அறுகுவிளையை சேர்ந்த அருள் சிங் (32) வந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருள் சிங், ராஜேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அருள் சிங்கை வடசேரி போலீசார் கைது செய்தனர்.
கடன் தொல்லையால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
நித்திரவிளை அருகே உள்ள புல்லாணிவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில் (42) கொத்தனார். இவருக்கு அஜிதா (35) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
அஜிதா அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். சுனில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதனால் அதிக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லை காரணமாக சுனில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை தனது வீட்டில் உள்ள மேல் மாடியில் உள்ள அறையில் உறங்கி கொண்டிருந்தார். மனைவி...
இலங்கை முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளை குறைக்க முடிவு: அதிபர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
ராமேசுவரம்: இலங்கை முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளைக் குறைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த அதிபர்தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, முந்தையஇலங்கை அரசுகளில் புரையோடிஇருந்த ஊழல், வீண் விரயம்,முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுவேன் என்றும், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேவையற்ற செலவுகளை குறைப் பேன் என்றும் அறிவித்திருந்தார்.
அமைச்சரவை கூட்டம்: இந்நிலையில், அநுர குமார திசாநாயக்க தலைமையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர்...
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் முதல் நெதன்யாகு ரியாக்ஷன் வரை – நடந்தது என்ன?
இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. உடனடியாக பொதுமக்களுக்கு சைரன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு...
100 ரன்களுக்கு ஆட்டமிழக்க தயாராக இருந்தோம்: சொல்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா
கான்பூர்: மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முடிவை பெற வேண்டும் என்பதற்காக 100 ரன்களுக்கு கூட ஆட்டமிழக்க தயாராக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக இந்திய அணி சுமார் 230 ஓவர்களை இழந்தது. இதில் முழுமையாக இரு நாட்கள் ஆட்டம் கைவிடப்பட்டதும் அடங்கும். முதல் நாள் ஆட்டத்திலும் 35 ஓவர்களே வீசப்பட்டிருந்தன. 4-வது ஆட்டத்திலும் முழுமையாக...
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்த பாபர் அஸம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண வேண்டியுள்ளது.
தனது முடிவை செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார் பாபர் அஸம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அந்த அணியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் இந்த நிலை தொடர்கிறது. உள்நாடு மற்றும் அயலகம் என அந்த அணி தடுமாறி வருகிறது. இந்த...
காஷ்மீர் இறுதிகட்ட தேர்தலில் 65.65 சதவீத வாக்குப்பதிவு: அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான இறுதி மற்றும் 3-வது கட்ட தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்ஆணையம் அறிவித்தது. முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று 40 தொகுதிகளுக்கு நடைபெற்றது. தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள், 8 முன்னாள் எம்எல்ஏக்கள், 4 முன்னாள் அரசு அதிகாரிகள்...
சித்தராமையா மீது அமலாக்க துறை வழக்கு பதிவு: நிலத்தை ஒப்படைப்பதாக மைசூரு நகர நிர்வாகத்துக்கு மனைவி கடிதம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் நில முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவரது மனைவி அந்த நிலத்தை திரும்பஒப்படைப்பதாக கடிதம் எழுதிஉள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தைமைசூரு நகர்ப்புற மேம்பாட்டுகழகம் கையகப்படுத்தியது.இதற்கு மாற்றாக ரூ.56 கோடி மதிப்புள்ள 14 வீட்டு மனைகளை வழங்கியது. இந்த நிலத்தின் மதிப்பு, கையகப்படுத்திய நிலத்தின்மதிப்பைவிட அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக சமூகஆர்வலர்கள் புகார் தெரி வித்தனர்.
இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீதுவழக்குப் பதிவு செய்து...













