Home 2024
Yearly Archives: 2024
வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த முகமூடி கொள்ளையர்களை விரட்டிய பஞ்சாபி பெண்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த பெண் மந்தீப் கவுர். இவரது கணவர், தங்க நகை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை, மந்தீப் கவுர் குழந்தைகளுடன் தனியாக இருந்த சமயத்தில், மூன்று முகமூடிகொள்ளையர்கள் அவரது வீட்டுக்குச் சென்றனர்.
கொள்ளையர்கள் வருவதை அறிந்த மந்தீப் கவுர், வேகமாக ஒடிச் சென்று கதவைத் தாழிடமுயன்றார். மறுபக்கம் கொள்ளையர்கள் கதவைத் தள்ளி வீட்டுக்குள் நுழைய முயன்றனர். எனினும்,தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி மந்தீப் கவுர் கதவின் தாழ்பாளைப் பூட்டினார். பிறகு அருகில் இருந்த சோபாவை எடுத்து...
சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்தை திரும்பப் பெற்ற பெண் அமைச்சர்!
திரை நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடு தான் காரணம் என தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்வினைகள் எழுந்த நிலையில் அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
கடந்த 2017 அக்டோபரில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் திருமண வாழ்க்கையில் இணைந்தனர். இந்நிலையில், கடந்த 2021 அக்டோபரில் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். அதன் பின்னர் இருவரும் அவர்களது பணிகளை கவனித்து வருகின்றனர். நாக சைதன்யாவுக்கும் நடிகை...
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூய்மை வாரம் நிறைவு: காந்தி ஜெயந்தி விழா 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டதாக தகவல்
தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், தூய்மை வாரம் நிறைவு விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் தெற்குரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்களின் தேசபக்தி நிகழ்ச்சியும், புகழ்பெற்ற கலைஞர் எம்.ஏ.சங்கரலிங்கத்தின் 10 நிமிட மகாத்மா காந்தியின் உருவப்படம் வரைதல்...
கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த அணு உலைகளில் ஆண்டுதோறும் எரிபொருள் நிரப்பவும், பராமரிப்புப் பணிக்காகவும் மின்உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். மேலும், அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில், முதலாவது அணு உலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், 1,000 மெகாவாட் மின் உற்பத்திபாதிப்படைந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள்...
நடிகர் விஜய் கட்சி மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியில் நாளை பந்தல் கால் நடும் விழா
விஜய் கட்சி மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா விக்கிரவாண்டியில் நாளை நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து, மாநாட்டு நடத்துவதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டுக்கு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எத்தனை பேரை அழைத்து வர வேண்டும், அவர்களுக்கான வசதிகள் குறித்து தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது, மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்கவேண்டும் என...
கோவை ஈஷா மையத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை
கோயம்புத்தூர் வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “ஈஷா யோகாமையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது 2 மகள்களை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இதையடுத்து, ஈஷா யோகா மையம் மீதுள்ள நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோவை மாவட்ட காவல் மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈஷா மையத்தில் விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாகநேற்றும் விசாரணை நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலா அதிகாரிகள்...
162 மீனவர்களை விடுவிக்க கோரி இலங்கை துணை தூதரகம் 8-ம் தேதி முற்றுகை: பாமக தலைவர் அன்புமணி தகவல்
இலங்கை சிறைகளில் உள்ள 162 மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 8-ம் தேதி பாமக சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் ராமேஸ்சுவரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும்.அதனால், தமிழக மீனவர்களாக இருந்தாலும், இலங்கை மீனவர்களாக இருந்தாலும் எல்லையைக் கடக்காமல் மீன்பிடிக்க முடியாது.
அதேநேரத்தில்...
பாஜகவை கண்டித்து சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: காங்கிரஸார் பங்கேற்பு
ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவைக் கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ்., பாஜகவை கண்டிக்கும் வகையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழக காங்கிரஸ்...
156-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: காந்தி சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை
மகாத்மா காந்தியடிகளின் 156-வதுபிறந்த நாளை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கும் கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கும் அதனருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிமரியாதை செலுத்தினார். அவருடன்மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,...
குமரி அறிவியல் பேரவை சார்பில் காந்திய சேவை விருது
குமரி அறிவியல் பேரவை, ஆற்றூர் என் வி கே எஸ் கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய உலக அகிம்சை தினம், காந்தி பிறந்தநாள் மற்றும் காந்தி சேவை விருது வழங்கும் விழா போன்றவை கல்லூரி அரங்கில் நேற்று (2 -ம் தேதி) நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன் நாயர் தொடங்கி வைத்தார். காலையில் காந்திய சிந்தனையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அம்சங்கள் என்ற பொருளில் கலந்தாய்வு நடைபெற்றது. மாலையில்குமரி அறிவியல் பேரவை சார்பில் மூன்று பேருக்கு காந்தியசேவை விருது வழங்கப்பட்டது.
நடமாடும் நூலகம் பேராசிரியர் இரா....














