Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி அகண்ட தீப விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம் ஒளியேற்றத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது. காமாட்சி விளக்குகளுடன் கன்னிப் பெண்கள் தாமரை சக்கரத்திலும், அகல் விளக்குடன் ஆண் தெய்வ வேடமிட்ட சிறுவர்கள் முக்கோண சக்கரம் உட்பட பல்வேறு அம்சங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கருவறைக்குள் அகண்ட தீபம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 9 நாட்கள் நவராத்திரி விழாவின் முதல் நாள் விழா நேற்று தொடங்கியது.

காந்தி சிலை சேதம்: நடவடிக்கை கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருதங்கோடு கிராமம் காலனி பகுதியில்,  இரணியல் சர்வோதய வளாகத்தில் அமைந்திருந்த தேச தந்தை மகாத்மாகாந்தியின் திருவுருவ சிலையை அடித்து நொறுக்கியவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டும், நடவடிக்கை எடுக்க விடாமல் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் துணை போவதாக குற்றசாட்டுகளை முன்வைத்தும், இதற்கு கண்டனங்கள் தெரிவித்தும், நேற்று மாலை 4 மணிக்கு கழுவன்திட்டை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்புறம் மேற்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை வகித்தார்....

நாகர்கோவிலில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2026 இல் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கழக நிர்வாகிகளிடம் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.

கோட்டாரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 70), ஆட்டோ டிரைவர். கடந்த சில மாதங்களாக அவர், உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு உடல் நிலை சரியாக வில்லை. இதனால் மனமுடைந்த ஜேக்கப் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பைடனின் மோசமான நிர்வாகம் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியதாவது: இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மோசமான நிர்வாகமே காரணம். நான் அதிபராக இருந்தபோது ஈரான் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கு எப்போதும் பணநெருக்கடி இருந்தது. இதனால், ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருந்தனர். ஆனால், கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனது முதல் ஈரானுக்கு பணத்தை வாரி இறைத்தார். இதனால், அவர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றனர். எனது ஆட்சி...

ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் பும்ரா: ஜெய்ஸ்வால் 3-வது இடம்

0
யு-19 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யு-19 இந்திய அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்தன. 3 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 67.4 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 212 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 61.1...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்கம்

 ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன....

நாடு வளம் பெறுவதற்கான புதிய பாதையாக மாறிய தூய்மை இந்தியா இயக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி டெல்லி விங்யான் பவனில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்நரேந்திர மோடி கலந்துகொண்டுபேசியதாவது: தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டு நிறைவதையொட்டி `சேவா பக்வாடா' என்ற பெயரில் கடந்த 15 நாட்களில் 27 லட்சம் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இதில் 28 கோடிபேர் கலந்துகொண்டனர். நாடு வளம் பெறுவதற்கான புதிய பாதையாக மாறியுள்ளது தூய்மை இந்தியா இயக்கம். கோடிக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் கலந்துகொண்டு வருவது பெருமிதம் அளிக்கிறது....

தெற்கு டெல்லி பகுதியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்: 4 பேர் கைது

டெல்லியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 500 கிலோ கோகைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தெற்கு டெல்லியில் உள்ள திலக் நகரில் கடந்த சனிக்கிழமை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹசிமி முகமது வாரீஸ், அப்துல் நயீப் என்ற 2 அகதிகளிடமிருந்து 400 கிராம் ஹெராயின், 160 கிராம் கோகைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது....

மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: உள்துறை அமைச்சகம் வழங்கியது

மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6,000 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டன. இதில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. மேலும், பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.6,000 கோடியை நிவாரண நிதியாக நேற்று வழங்கியது. அதன்படி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் (எஸ்டிஆர்எப்) மத்திய அரசின் பங்காகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முன்பணமாகவும் இந்தத் தொகை 14...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!

நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...

குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது

குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...