Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு பங்கு: பிரக்யா தாக்குரின் வழக்கறிஞர் வாதம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில்இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்துக்கு (சிமி) தொடர்பிருக்கலாம் என இவ்வழக்கின் பிரதான குற்றவாளியும், பாஜக தலைவருமான பிரக்யா தாக்குரின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு முகமை வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஏ.கே. லகோட்டி அமர்வு முன்பு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, பிரக்யா தாக்குர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜே.பி. மிஸ்ரா கூறியதாவது: கடந்த 2008-ம் ஆண்டு...

மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு ஒப்புதல்

மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. கடந்த அக்டோபர் 12, 2004 அன்று ‘செம்மொழிகள்’ என புதிய வகை மொழிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு...

டெல்லியில் ரூ.5,600 கோடி போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸுக்கு தொடர்பு: பாஜக எம்.பி. சுதன்ஷு திரிவேதி குற்றச்சாட்டு

தலைநகர் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 5 ஆயிரத்து 600 கோடி ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக துஷார் கோயல், ஹிமசு குமார்,அவுரங்கசீப் சித்திக், பாரத் குமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கைதானவர்களில் ஒருவரான துஷார் கோயல், ஹரியானா...

பண்டிகை காலங்களில் தட்டுப்பாடின்றி பால், பால் பொருட்கள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

புதிதாக பால் வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பொறுப்பேற்ற பிறகு, அம்பத்தூர், சோளிங்கநல்லூர் பால் பண்ணைகள் மற்றும் பால் உப பொருட்கள் பண்ணையில் நேற்று ஆய்வு செய்தார். அம்பத்தூர் பால் பண்ணையை பொருத்தவரை, தினசரி சுமார் 4.60லட்சம் லிட்டர் பால் தயாரிக்கப்பட்டு அம்பத்தூர், அண்ணாநகர், தி.நகர்,அயனாவரம், ஆவடி, திருவல்லிக் கேணி போன்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆலையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, பால் பாக்கெட் தயாரிப்பு மற்றும் இயந்திரங்களை பாதுகாப்பான முறையில் கையாளுவது மற்றும் பால் பண்ணையை தூய்மையாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட...

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழகம்: மத்திய அரசு புள்ளியியல் ஆய்வை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம்

தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதுடன், 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் தலைசிறந்த மாநிலம் என மத்திய அரசின் புள்ளியியல் துறை ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடங்கிய பிறகு, 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்ற இலக்குடன் தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை குறைப்பு? – அக்.8-ல் அமைச்சரவை முடிவெடுக்கும் என தகவல்

தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறைப்பது உள்ளிட்ட சில முக்கியமான முடிவுகள் குறித்து தமிழக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்.8-ம் தேதி காலை 11மணிக்கு தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் நிதி சார்ந்த புதிய மற்றும் பழைய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள்எடுக்கப்படுகின்றன. தொழில்துறை முதலீடுகள், சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கிடையே, தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றுபல்வேறு தரப்பினரும் கோரிக்கை...

வெள்ளி கிரக ஆய்வுக்காக 2028-ல் வீனஸ் விண்கலம் ஏவப்படும்

விண்வெளி அறிவியல் ஆய்வில் சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா, ஆஸ்ட்ரோசாட் உட்பட பல்வேறு முன்னெடுப்புகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் சூரிய குடும்பத்தில் பூமிக்குமிக அருகில் உள்ள வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வீனஸ் விண்கலத்தை அனுப்புவதற்கு இஸ்ரோ திட்டமிட்டு வந்தது. சமீபத்தில் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூ.1,236 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை அடுத்து பணிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இந்நிலையில், வீனஸ் விண்கலம் 2028 மார்ச் 29-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ...

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அரூர் பகுதியில் கடைகள் அடைப்பு: பாமக போராட்டத்தால் பரபரப்பு

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் விடுக்கப்பட்ட அரை நாள் கடையடைப்பு போராட்டத்தால், அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று (அக்.4) பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்ப வேண்டும் என பாம்க சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அரை நாள் கடை அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன்படி போராட்டத்தினை ஒட்டி தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர்,மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு...

சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்-...

கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை மற்றும் கடமலைக்குன்று வட்டார பேரவை இணைந்து நடத்திய போதை விழிப்புணவு பேரணி பிலாங்காலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்திலிருந்து துவங்கி பூந்தோப்பு சி. எஸ். ஐ ஆலயம் வரை நடைபெற்றது.   பேரணிக்கு பேரவை தலைவர். மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார். இந்த பேரணியை கன்னியாகுமரி சி எஸ் ஐ பேராயர் A. R. செல்லையா கொடி அசைத்து துவங்கி வைத்தார். காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!

நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...

குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது

குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...