Home 2024
Yearly Archives: 2024
அபிமன்யு ஈஸ்வரன் சதம் விளாசல்
லக்னோ: இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வரன்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 286 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 222 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் அஜிங்க்ய ரஹானே 97 ரன்கள் சேர்த்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார்...
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது வங்கதேச அணி
ஷார்ஜா: மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபனா மோஸ்ட்ரி 38 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களும்...
அர்ஜெண்டினா அணிக்கு திரும்பினார் மெஸ்ஸி
பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி தனது அடுத்த ஆட்டங்களில் வெனிசுலாவுடன் வரும் 10-ம் தேதியும் பொலிவியாவுடன் 15-ம் தேதியும் மோத உள்ளது.
இந்த இரு ஆட்டங்களுக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி அணிக்கு திரும்பி உள்ளார். காயம் காரணமாக...
மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா – நியூஸிலாந்து இன்று மோதல்
துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி...
மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்
ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை 31 ரன்களில் வீழ்த்தி உள்ளது பாகிஸ்தான் அணி.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று (வியாழக்கிழமை) விளையாடியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணி 20 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் பாத்திமா...
மாட்டிறைச்சி சாப்பிட்டவர் சாவர்க்கர்: கர்நாடக அமைச்சர் கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு
பெங்களூரு: சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னட பத்திரிகையாளர் திரேந்திரா எழுதிய, ‘காந்தியின் கொலையாளி: நாதுராம் கோட்சேயின் உருவாக்கம்' என்ற நூலை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்றுமுன்தினம் மாலை பெங்களூருவில் வெளியிட்டார். அப்போது தினேஷ் குண்டுராவ் பேசுகையில், "சாவர்க்கர் பிராமணராக இருந்தாலும் மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். அவர் ஒருபோதும் பசுவதைக்கு எதிராக இருந்ததில்லை. இறைச்சி சாப்பிடுவதை வெளிப்படையாக ஊக்குவித்துள்ளார்" என குறிப்பிட்டார். இந்த உரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை...
ராணுவ வீரருக்கு 56 ஆண்டுக்குப் பிறகு இறுதிச் சடங்கு
ராணுவத்தின் மருத்துவப் படைப்பிரிவு வீரர் நாராயண் சிங் பிஷ்ட்.கடந்த 1968-ம் ஆண்டு சண்டிகரிலிருந்து லே நகருக்கு சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன்-12 விமானம் இமாச்சல பிரதேசத்தின் ரோக்டங் என்ற இடத்தில் பிப்ரவரி 7-ம் தேதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த நாராயணசிங் உட்பட 4 பேரின் உடல்களை எங்கு தேடியும் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையி்ல், 56 ஆண்டுகளுக்குப் பிறகு அடர்ந்த பனிப் பகுதியிலிருந்து நாராயண் சிங் உடல் அண்மையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, உத்தரகாண்டில் சமோலி மாவட்டம் தரளி பகுதியில்...
தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது: ஹரியானா சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுமாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல்மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இங்கு2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள்.
இங்கு கடந்த சில நாட்களாக பாஜக,...
திருச்சூர் பூரம் விழா சதி குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் கேரள முதல்வர்
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அளித்த பேட்டி: கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பூரம் திருவிழாவில் சதி செய்ய சில முயற்சிகள் நடந்தன. இது குறித்து ஏடிஜிபி அஜித்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அந்த அறிக்கை கடந்த மாதம்23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பூரம் விழாவை நடத்த கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளால், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் அந்த அறிவிக்கை விரிவானதாக இல்லை. குறைபாடுகள் உள்ளன. பூரம் விழாவில் சதி செய்ய...
பிரதமர் நரேந்திர மோடி நவராத்திரி வாழ்த்து
புதுடெல்லி: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சக்தி வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான திருவிழா அனைவருக்கும் மங்களகரமானதாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் கவுடில்யர் பொருளாதார மாநாடு இன்று தொடங்கி வரும் 6-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனம் இந்த மாநாட்டு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள்இதில் பங்கேற்று...














