Google search engine
Home 2024

Yearly Archives: 2024

நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய பிரதமர், ஆளுநர், முதல்வருக்கு நன்றி

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். சிலதினங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்தக்குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டபடி கடந்த மாதம் 30-ம் தேதி இரவு சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோடா மகா தமனியில் இருந்த வீக்கத்துக்கு அறுவைசிகிச்சையின்றி இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தி சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனியறை வார்டுக்கு மாற்றப்பட்டார்....

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குறுக்கு விசாரணை

 சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அதேபோல அமலாக்கத் துறைதரப்பு சாட்சியான தடயவியல்துறை உதவி இயக்குநர் மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார். அப்போது அமைச்சர் தரப்புவழக்கறிஞர் இளங்கோ, விசாரணையை தள்ளிவைக்க கோரினார். அதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதியும், அரசு தரப்பு சாட்சி தற்போது ஆஜராகியுள்ளார். எனவேசாட்சி விசாரணை இன்றே மேற்கொள்ளப்படும் என்றார்....

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், வரும் 6, 7-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 8-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று முதல் அக். 9 தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, சேலம்,...

கருங்கல்: குமரி மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம்

குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் கருங்கலில் நேற்று ( 4-ம் தேதி)  நடைபெற்றது.    கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட திமுக செயலா் த. மனோதங்கராஜ் எம். எல். ஏ. தலைமை வகித்தாா். துணை செயலா்கள் பாபு, டேவிட் ராஜபோஸ், அப்புக்குட்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாவட்ட அளவில் அனைத்து பகுதிகளிலும் திமுக செயல் வீரா்கள் கூட்டம் நடத்துவது, துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதற்கு எதிராக பொதுமக்களிடம் பிரசாரம் செய்வது...

நாகர்கோவிலில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் உத்தர வின்பேரில் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் தீவிபத்துகளை எப்படி தடுப்பது? பேரிடர் காலங்களில் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது? பிறரை எப்படி மீட்பது? என்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சுமார் 1, 600 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியை நாகர்கோவில் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்...

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கோட்டயத்திற்கும், குமரியில் இருந்து புனலூருக்கும் ரயில் சென்று வருகிறது. இந்த 2 ரயில்களும் டவுன் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த 2 ரயில்களும் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிள்ளியூர்: பாசன கால்வாய் சீரமைப்பு; எம்எல்ஏ தொடக்கி வைப்பு

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட சிற்றார் பட்டணங்கால் கிளை கால்வாய்கள் பல பகுதிகளில் தூர்வாரப்படாமல் பழுதடைந்து  காணப்பட்டது. இந்த கால்வாய்களின் கரைகள்  மற்றும் பக்க சுவர்களை சீரமைக்கவும் மதகுகளை நவீன முறையில் சீரமைத்து விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில் தற்போது முதல் கட்டமாக கால்வாய்களை சீரமைக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ 6. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக...

குழித்துறை: செக் மோசடி வழக்கு; வாலிபருக்கு 1 ஆண்டு சிறை

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூரியன் என்பவர் மகன் ஷாஜி (47) இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் மகன் ஜஸ்டின் (46). இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் ஜஸ்டின் தனது நண்பர் ஷாஜியிடமிருந்து ரூ 4. 5 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். இதற்கு ஈடாக ஜஸ்டின் தனது வங்கி கணக்கில் இருந்து செக் ஒன்றை வழங்கி உள்ளார். பின்னர் குறிப்பிட்ட தேதியில் வங்கியில் ஷாஜி செக்கை செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாதது தெரிய ...

ஓடிடியில் நேரடியாக வெளியாகிறதா ‘இந்தியன் 3’?

‘இந்தியன் 3’ படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் படுதோல்வியை தழுவியது. அனிருத்தின் பின்னணி இசையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ’இந்தியன் 2’ படத்தின் முதலீட்டு அளவில் லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டமே ஏற்பட்டது. மேலும், ஓடிடி தளத்திலும் வெளியாகி கடுமையாக...

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி

அபுதாபி: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 139 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. அபுதாபியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 102 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 86 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 79 ரன்களும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!

நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...

குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது

குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...