Home 2024
Yearly Archives: 2024
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம்
புதுடெல்லி: ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹெரிடேஜ் ரயில்களை உருவாக்கும். ஒவ்வொரு ரயிலும் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும். மேலும் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க ரூ.70 கோடி செலவிடப்படும்.
வடக்கு ரயில்வேயின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது....
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியில் சீனா தீவிரம்: விமானப் படை தளபதி தகவல்
புதுடெல்லி: இந்தியாவை ஒட்டியுள்ள எல்லைகட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் சீனா உள்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என இந்திய விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங் நேற்று தெரிவித்தார்.
இந்திய விமானப் படை தினம் (ஏர் ஃபோர்ஸ் டே) வரும் செவ்வாய்க்கிழமை (அக்.8) கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது தளபதி ஏ.பி. சிங் கூறியதாவது:
எல்ஓசி எனப்படும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா தனது உள்கட்டமைப்பை தீவிரமாக அதிகரித்து வருகிறது.அதற்கு இணையாக, எல்லையில் இந்தியாவும் தனது உள்கட்டமைப்பை...
உ.பி. தேர்தலில் சிராக் பஸ்வான் கட்சி போட்டி: அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு நெருக்கடி
புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் தலித் ஆதரவு கட்சியாக வளர்ந்து வருவது லோக் ஜனசக்தி (எல்ஜேபி). இக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், மத்திய உணவுத் துறைஅமைச்சராக உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினரான பஸ்வான், உ.பி. தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
உ.பி.யின் தலித்துகளில் முக்கியபிரிவான ‘பாஸி’ சமூகத்தினரின் ஆதரவு தமக்கு உள்ளதாக சிராக்பஸ்வான் நம்பிக்கை தெரிவிக்கிறார். இதனால், பாஸி உள்ளிட்டதலித் சமூகத்தினரின் வாக்குகளைபெற்று வரும் சமாஜ்வாதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உ.பி.யில் தலித் ஆதரவு கட்சியான முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளது. இவருக்கு...
டைம் மெஷின் மூலம் இளமை தோற்றத்தை பெறலாம்: ஆசை காட்டி ரூ.35 கோடியை சுருட்டிய உ.பி. தம்பதிக்கு வலை
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் டைம்மெஷினில் சிகிச்சை எடுப்பதன் மூலம் இளமை தோற்றத்தை பெறலாம் என்று கூறி பொதுமக்களிடமிருந்து ரூ.35 கோடியை சுருட்டிய தம்பதியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் (தெற்கு) அங்கிதா சர்மா கூறியதாவது: ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தம்பதியர் கான்பூருக்கு அருகே உள்ள கித்வாய் நகரில் புதிதாக தெரபி மையத்தை தொடங்கி உள்ளனர்.
இஸ்ரேல் இயந்திரம்: அங்கு வரும் வயதான வாடிக்கையாளர்களிடம் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைம் மெஷின் மூலம் சிகிச்சைஎடுத்துக்கொண்டால் வெகுசீக்கிரமாகவே...
ஹரியானா தேர்தல்: ‘மகளிர் உரிமை காக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்’ – வினேஷ் போகத்
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (அக்.5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் ஆகியோர் தங்களுக்கே உரித்தான பாணியில்...
ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்
திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (சனிக்கிழமை) காலை திறந்து வைத்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு நேற்றிரவு காணிக்கையாக வழங்கினார். மேலும், சுவாமியை தரிசித்து, 2025-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள், டைரிக்களை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு நடந்த...
அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழா: அக்.17 முதல் 20 வரை பொதுக்கூட்டங்கள்
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட, மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17-ம் தேதி 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதை முன்னிட்டு, 17-ம் தேதிமுதல் 20-ம் தேதிவரை பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திராஉள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
அதன்படி, 17-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து, ஏழை, எளியோருக்கு அன்னதானம்...
100 நாள் வேலை திட்டத்தை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி
மதுரை: தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை யாரும் பணிகளை முறையாகக் கண்காணிப்பதில்லை என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த கோபிநாத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி குறிகாரன் வலசை, கீழ்பாகம் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள்நடைபெறுகின்றன. கிராமத்தில் இல்லாதவர்கள், வட மாநிலத்தவர், இறந்தவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்கள்...
பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2 நாட்கள் செயல்படாது
பராமரிப்புப் பணி காரணமாக, பாஸ்போர்ட் சேவை இணையதளம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை செயல்படாது என தெரிவிக் கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் சேவை இணைய தளத்தில் ( www.passportindia.gov.in ) தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ம் தேதி (நேற்று) இரவு 8 மணி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தைப் பயன்படுத்த முடியாது என்பதோடு, தங்களது நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பிறகு அணுகுமாறு...
கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித் தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
ஒருகால பூஜை திட்ட கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்படி, நடப்பாண்டு 500 மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024–25-ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “ஒருகால பூஜைத்திட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் குழந்தைகள் நலன்கருதி, நடப்பாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்புக்காக தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
500 மாணவர்கள்: இதை செயல்படுத்தும் வகையில்,...














