Home 2024
Yearly Archives: 2024
நாகர்கோவிலில் 8 ஆட்டோக்கள் அடித்து உடைத்து சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் ஏராளமான ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இரவு நேரங்களிலும் அங்கு ஆட்டோக்கள் நிற்கும். நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் சுமார் 10 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. நேற்று காலையில் ஆட்டோ டிரைவர்கள் அங்கு வந்தபோது, 8 ஆட்டோக்களை மர்மநபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இதில் 2 ஆட்டோக்களின் கண்ணாடி உடைந்திருந்தது. மேலும் சில பொருட்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார்...
கொல்லங்கோடு: கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் நேற்று (6-ம் தேதி) இரவு மேடவிளாகம் மகளிர் மீனவர் கூட்டுறவு சங்க கட்டிடம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு வாலிபர்கள் நின்றனர். போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொல்லங்கோடு அருகே உள்ள கேரள பகுதியான தெற்கே கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மகன்...
சிவகார்த்திகேயன் தம்பியாக நடிக்கிறார் அதர்வா?
இயக்குநர் சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் 'புறநானூறு' என்ற படத்தை இயக்க இருந்தார். இதில் விஜய் வர்மா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பதாக இருந்தது. அந்தப் படம் டிராப் ஆனதை அடுத்து அதே கதையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்குகிறார்.
இதில் சிவகார்த்திகேயனுக்குத் தம்பியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் விலகிவிட்டார். அந்த கேரக்டரில் அதர்வா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடிப்பதாகவும் படப்...
ஒரு படம் ஓடவில்லை என்றால் நடிகைகளை குற்றம் சொல்வார்கள்: மாளவிகா மோகனன் வருத்தம்
நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என்று மாளவிகா மோகனன் கூறினார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடு இருப்பதைக் காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும், திரைக் கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வெவ்வேறு மொழி, உணவு, போக் கூடிய அல்லது பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நடிகர்கள், நவீன நாடோடிகளைப் போன்றவர்கள். ஒரு நாள் ஹைதராபாத் என்றால் அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமம் என பயணிக்க வேண்டியிருக்கும். அதனால் இருக்கும்...
தாதாவாக ஆனந்த் ராஜ் நடிக்கும் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’
ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் படத்துக்கு 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இதில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர்.
முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகிறது. அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
விளையாட்டு பல்கலை. 14-வது பட்டமளிப்பு விழா: 3,638 மாணவர்களுக்கு பட்டம்
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 3,638 மாணவர்கள் பட்டம் பெற்றனர். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக இணைவேந்தரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக அளவில் உடற்கல்வி, விளையாட்டுபயிற்சி விளை யாட்டு மேலாண்மை உள்ளிட்ட பல்...
மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
துபாய்: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை, தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக் கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக ஸ்டெ பானி டெய்லர் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹெய்லி மேத்யூஸ்...
இரானி கோப்பை கிரிக்கெட்: மும்பை முன்னிலை
லக்னோ: ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கெதிரான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்திருந்தது. நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தின்போது அந்த அணி 416 ரன்கள் குவித்து...
பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம்: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி
புதுடெல்லி: பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத் தின் கீழ் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இத்திட்டத்தில் தொழில் பயிற்சி பெறுவோருக்கு ஒராண்டுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்படும். மேலும், ஒரு முறை மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். மொத்தம் தொழிற்பயிற்சி பெறுவோருக்கு ரூ.66,000 கிடைக்கும்.
இத்திட்டத்தில் சிஎஸ்ஆர் நிதி அடிப்படையில் 500 முன்னணி நிறுவனங்கள் பதிவு செய்யவுள்ளன. முதல் நாளிலேயே 111 முன்னணி நிறுவனங்கள், கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ள இணையதளத்தில் பதிவுசெய்து 1079 பேருக்கு தொழில்பயிற்சி...
மகாராஷ்டிராவில் மந்திராலயா மாடியில் இருந்து பாதுகாப்பு வலையில் குதித்த எம்எல்ஏ.க்கள்
மும்பை: மகாராஷ்டிராவில் தாங்கர் சமூகத்தினருக்கு நாடோடி பழங்குடியினர் (என்.டி) என்ற பிரிவின் கீழ் 3.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 7% இடஒதுக்கீடு கொண்ட எஸ்டி பிரிவில் தங்களை சேர்க்க வேண்டும் என்று தாங்கர் சமூகத்தினர் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தாங்கர் சமூகத்தை சேர்ந்த 6 பேர் பந்தர்பூரில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தாங்கர் சமூகத்தினரின் இந்த கோரிக்கைக்கு துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் தலைமையிலான மகாராஷ்டிர எஸ்டி எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நர்ஹரி ஜிர்வால்...














