Home 2024
Yearly Archives: 2024
பிரதமரின் போர் நிறுத்த முயற்சிக்கு அனைத்து கட்சிகளும் வரவேற்பு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
‘பிரதமரின் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் நிறுத்த முயற்சியை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்கின்றன’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மெரினாவில் விமானப்படை வீரர்களின் வான்வெளி சாகசம் வரவேற்கத்தக்கது. அதைக்காண கூடியிருந்த மக்கள் கூட்ட நெரிசலில் இறந்ததாகத் தெரியவில்லை. மயக்கம், ஏற்கெனவே இருந்த நோய்களால் இறந்ததுபோல் தெரிகிறது. இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என, எங்களது கட்சியினரும், அரசியல் நோக்கர்களும் கூறுகின்றனர். கருத்து கணிப்புகளை...
தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு
ராமேசுவரம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே பெருவயலில், ரெணபலி முருகன் கோயில் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி (கி.பி.1728-1735) மன்னரின் (பிரதானி) வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்டது. அவருக்கு பின் கி.பி.1736-ல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலையனூர் எனும் கிராமத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்த கல்வெட்டு இந்த கோயிலில் உள்ளது.
இந்நிலையில் இந்த கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியமன்னர் கல்வெட்டை ராமநாதபுரம்...
பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க சோலார் அதிர்வு மின்வேலி அமைக்க அரசுக்கு பரிந்துரை
ஸ்ரீவில்லிபுத்தூர்: வனவிலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தென்னைவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதி கிராமங்களான சிங்கம்மாள்புரம், மம்சாபுரம், வாழைக்குளம், திருவண்ணா மலை வெங்கடேசபுரம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்மலையடிவாரப்...
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
1.90 லட்சம் செடிகள் நடவு: இந்நிலையில் இரண்டாம் கட்ட சீசனுக்காக கடந்த ஜூலைமாதம் குன்னூர் சிம்ஸ் பூங்காவளாகத்தை சுற்றிலும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், உட்பட பல்வேறு நாடுகளை தாயகமாக கொண்ட சால்வியா, பிளாகஸ், காஸ்மாஸ்,...
காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன
காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் மற்றும் முதல் பருவ தேர்வுகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதி முதல்...
குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் நீதி கேட்டு வந்த பெண்
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை பகுதியை சேர்ந்த ஜெபியா என்ற பெண், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் பலமுறை மனு கொடுத்த பின்பும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு கேட்டு தனது மாற்றுதிறனாளி மகனுடன் குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். வசதி படைத்தவர்களுக்கு வீடு கொடுப்பதாகவும் தனக்கு தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
நாகர்கோவில்: வீட்டிற்குள் புகுந்த வடமாநில வாலிபருக்கு அடி உதை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. நேற்று (30) வயதுடைய வாலிபர் ஒருவர் அங்குள்ள வீட்டின் சுவர் ஏறி குதித்துள்ளார். இதனை கவனித்த சிலர் திருடன், திருடன் என சத்தம் போட்டப்படி அவரை பிடிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட வாலிபர், அங்கிருந்து மற்றொரு வீட்டிற்கு தாவி பதுங்கியுள்ளார்.
இதனால் பொதுமக்கள் சல்லடை போட்டு அங்கு தேடினர். ஒரு கட்டத்தில் வாலிபர் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து அவரை நையபுடைத்தனர். பின்னர் அவரை நேசமணி நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்....
கருங்கல்: ஆசிரியை வீட்டில் கொள்ளை; 2 பேருக்கு சிறை
கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியை சேர்ந்தவர் சுனில் சுதர்லின் பாபு மனைவி கிறிஸ்டி நிர்மல் ஜாய் (40) இவர் அரசு பள்ளி ஆசிரியை. கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு கிறிஸ்டி பாலப்பள்ளத்தில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட குளச்சல் பகுதி மாயாண்டி என்ற சுஜித் (23), நெல்லை மாவட்டம் பழவூர் பகுதி சேர்ந்த சுரேஷ்கோபி என்ற ராமய்யா (30) சேர்ந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 பித்தளை...
மண்டைக்காடு: குண்டு வீச்சு வழக்கு 2 பேர் கைது
மண்டைக்காடு அடுத்த கருமன்கூடல் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (57). கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அதிகாலை பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு வளாகத்தில் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்திருந்தனர். ...
நித்திரவிளை: விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் மரணம்
நித்திரவிளை அருகே தெருவு முக்கு பகுதியை சேர்ந்தவர் மாதவன்பிள்ளை மகன் மனு (27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தூத்தூரை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (4-ம் தேதி) ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மனு இறந்துள்ளார்.
இதையடுத்து சக தொழிலாளர்கள் விசைப்படகை கேரள மாநிலம் அழிக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் கரை ஒதுக்கி, மனுவின் உடலை கண்ணூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்துள்ளனர். தொடர்ந்து மனு இறந்த...














