Home 2024
Yearly Archives: 2024
சீன உளவு பலூன்கள் போன்ற இலக்குகளை சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது விமானப்படை
புதுடெல்லி: அமெரிக்க வான் எல்லையில் கடந்தாண்டு ஜனவரி - பிப்ரவரியில் சீன உளவு பலூன் ஒன்று 58,000 அடி உயரத்தில் பறந்து சென்றது. இதை அமெரிக்க விமானப்படையின் எப்-22 ரேப்டர் ரக விமானம் ஏவுகணையை வீசி நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இதேபோன்ற உளவு பலூன் ஒன்று அந்தமான், நிகோபார் தீவு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு பறந்துள்ளது. அந்தமான் பகுதியில் போர் விமானங்கள் அப்போது நிறுத்தி வைக்கப்படாததால் அந்த உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்படவில்லை. அமெரிக்க வான் எல்லையில் நடந்த சம்பவத்தை அடுத்து, இதே போன்ற...
துர்கை அம்மனை கவுரவிக்க பாடல் எழுதினார் பிரதமர் நரேந்திர மோடி: சமூக வலைதளங்களில் வைரல்
புதுடெல்லி: நமது நாட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியுள்ளது. நவராத்திரி விழா முடிந்ததும் 10-ம் நாள் விஜய தசமி விழா நடைபெறும். இந்த பண்டிகை தொடங்கியுள்ளதை அடுத்து பக்தர்கள் விரதம் இருந்து பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகை வட மாநிலங்களில் தசரா பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படு கிறது. குறிப்பாக மேற்கு வங்கம், கர்நாடகாவில் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு, பிரதமர் மோடி ‘கர்பா' பாடலை எழுதி உள்ளார். கர்பா என்பது பாரம்பரியமான குஜராத்...
நாக்பூர் ரயில் நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட இரு பயணிகள் கொலை
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்ரயில் நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
நாக்பூர் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் நேற்று அதிகாலையில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த 6-7 பயணிகளை மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கான்கிரீட் சிலாப் மூலம் தாக்கினார். அவர்களின் அலறல் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். தப்பிக்க முயன்ற மன நோயாளியை சுற்றி வளைத்து...
ஹரியானா வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக முன்னிலை; காங்கிரஸுக்கு அதிர்ச்சி
சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பாஜக முன்னிலை: வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் காலை 10 மணிக்குப் பின்னர் தேர்தல் முடிவுகளின் போக்கு மாறியது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், பாஜக 46 தொகுதிகளிலும், 4 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன. 46-ஐ கடந்து முன்னிலை பெறும்...
ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு: காங்., – தேசிய மாநாடு கட்சி கூட்டணி 40+ இடங்களில் முன்னிலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய தரவுகளின்படி பாஜக - 26, காங்கிரஸ் கூட்டணி - 48, பிடிபி - 3, பிற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆரம்ப நிலையில் காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி கூட்டணி - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது....
6 மாவட்டங்களில் சூரியசக்தி மின்சார பூங்கா: மின்வாரியம் அமைக்கிறது
சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கும் மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைப்பதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் தற்போது வரை 8,180 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தனியார் நிறுவனங்களே அமைத்துள்ளன.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் தவிர்த்து மாவட்டம் தோறும் தலா 50 முதல் 100 மெகாவாட் என மொத்தம் 4 ஆயிரம் மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்க கடந்த 2021-22-ல் மின்வாரியம் திட்டமிட்டது. இதற்காக,...
சாம்சங் ஊழியர் வேலை நிறுத்தம்: அமைச்சர்கள் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை
காஞ்சிபுரம் / சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில் அமைச்சர்கள் - தொழிற்சங்கம் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இன்று விடை தெரியும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சிஐடியு சார்பில் சங்கம் அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பனஉட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 29-வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங்...
விமான சாகசத்தை காணவந்தபோது நடந்த துயரம்: மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கதறல்
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் விமான சாகசத்தை கண்டுகளித்துவிட்டு வீடு திரும்பியபோது 5 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டு அவர்களது குடும்பத்தினர் கதறி துடித்தது காண்போரை கண்கலங்க வைத்தது.
மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 15 லட்சம் பேர் ஒரே நேரத்தில் திரண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அதுவும் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி இருந்ததால் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிகர்கள், உடல்நலம் குன்றியவர்கள்,...
என்எல்சி – ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி என்எல்சி நிர்வாகம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், ‘‘என்எல்சி நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க தொழிலாளர்நல தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நல நீதிமன்றங்கள் இருக்கும்போது, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை கோரி நேரடியாக உயர்...
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா விருது: அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் பாராட்டு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக, ஐநா அமைப்பின் 2024 ஆண்டுக்கான “United Nation Interagency Task Force Award” தமிழக சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது, தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு மருத்துவம் மற்றும்...














