Home 2024
Yearly Archives: 2024
புதுக்கடை: கம்பியில் மோதி வாலிபர் உயிரிழப்பு
புதுக்கடை அருகே கீழ்குளம், சுனவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்து ராஜ் மகன் கெபீஸ் ராயல் (20). பிளஸ் 2 வரை படித்த இவர் ஒலி ஒளி நிலையம் ஒன்றில் கூலிக்கு வேலை பார்க்கிறார்.
நேற்று (7-ம் தேதி) இரவு நண்பர் ஒருவரின் பைக்கில் மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று விட்டு இரவில் தேங்காபட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுக்கடையை அடுத்த அம்சி பகுதியில் செல்லும்போது, குறுக்கே நாய் ஒன்று பாய்ந்துள்ளது. இதில் நிலை தடுமாறி சாலையோரம் நடப்பட்டிருந்த கம்பி ஒன்றில் மோதியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த...
போதை பொருள் பார்ட்டியில் ஸ்ரீநாத் பாஸி, பிரயாகா மார்ட்டின்? – போலீஸ் அறிக்கையில் தகவல்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், ரவுடி கும்பல் தலைவர் ஓம்பிரகாஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவரை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவரின் கூட்டாளி சிஹாஸும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸாரின் விசாரணையில், ஓம்பிரகாஷை திரையுலகினர் உட்பட 20 பேர் ஓட்டலில் சென்று சந்தித்தது தெரிய வந்தது. போலீஸார் அங்கு செல்வதற்கு முன், போதைப் பொருள் பார்ட்டி நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் போலீஸாரின்...
‘டிஎன்ஏ’ படத்துக்கு 5 இசை அமைப்பாளர்கள்
ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், அடுத்து இயக்கும் படம், 'டிஎன்ஏ', அதர்வா நாயகனாக நடித்துள்ளார். நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜிப்ரான் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்துக்கு 5 பாடல்களுக்கு 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர். அவர்கள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது. பின்னணி இசையை...
‘அளந்து சிரிக்கணும் அமைதியா பேசணும்னுதான் விதி இருக்கு..!’ – பிரியா பவானி சங்கர் நேர்காணல்
ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர், ‘பிளாக்’. பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கி இருக்கிறார். வரும் 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷனில் பரபரப்பாக இருக்கும் பிரியா பவானி சங்கரிடம் பேசினோம். “நிறைய த்ரில்லர் கதைகளைப் பார்த்திருப்போம். அதுல இருந்து வேறுபட்ட படமாக இது இருக்கும். இந்தப் படத்தை புது முயற்சின்னும் சொல்லலாம். ‘டிமான்ட்டி காலனி’ ஷூட்டிங் நடந்த அதே நேரத்துலதான் இந்தப் படத்தோட ஷூட்டிங்கும் நடந்தது. படம் ஆரம்பிச்சு 5...
180 ரன்களை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை: வங்கதேச கேப்டன் ஷான்டோ புலம்பல்
குவாலியர்: குவாலியரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 128 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை வெற்றிகரமாக எட்டியது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. குவாலியர் போட்டியில் வங்கதேச அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை அந்த அணி பறிகொடுத்ததால் சராசரிக்கும் குறைவான இலக்கையே கொடுக்கமுடிந்தது. போட்டி முடிவடைந்ததும் வங்கதேச அணியின்...
ஓய்வு பெற்றார் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மகார்
புதுடெல்லி: இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மகார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயதான தீபா கர்மகார் கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் 4வது இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார்.
இந்தியாவில் இருந்து ஒலிம் பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்த அவர். விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக்ஸ்...
2-வது டெஸ்ட்: யு-19 இந்திய அணி 316 ரன்கள் குவிப்பு; சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் நித்ய பாண்டியா
சென்னை: யு-19 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யு-19 இந்திய அணிமுதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. நித்ய பாண்டியா 94 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த யு-19 இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. வைபவ் சூர்யான்ஷி 3 ரன்னில் ராம் குமார்பந்தில் போல்டானார். மற்றொரு தொடக்க வீரரான விஹான் மல்கோத்ரா 75 பந்துகளில்...
இலங்கை அணியின் முழுநேர பயிற்சியாளரானார் ஜெயசூர்யா
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முழுநேர பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறஉள்ள டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவர், பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயசூர்யா கடந்த ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணி சிறந்த முடிவுகளை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயசூர்யாவை முழுநேர பயிற்சியாளராக நியமித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயசூர்யாவின்...
தேசிய மகளிர் கால்பந்து போட்டி: சென்னை எஸ்பிஓஏ அணி கோல் மழை
சென்னை: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டுஉறைவிடப்பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.இதன் 2-வது நாளான நேற்று 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் சென்னை எஸ்பிஓஏ 15-0 என்ற கோல் கணக்கில் டெல்லி பப்ளிக் பிலாஸ்பூர் பள்ளியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் புனே சிஎம் சர்வதேச பள்ளி 12-0 என்ற கோல் கணக்கில் ஓமன் இந்திய பள்ளி அணியை வீழ்த்தியது.
எஸ்பிஓஏ தனது 2-வது ஆட்டத்தில் ஹரியானாவின் வித்யா தேவி ஜிண்டால் பள்ளியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில்...
இந்தியா-மாலத்தீவு ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அதிபர் முய்சு முன்னிலையில் கையெழுத்தானது
புதுடெல்லி: பிரதமர் மோடி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு முன்னிலையில் இந்தியா, மாலத்தீவு இடையே ரூ.3 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் முகமது முய்சு மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற தில் இருந்து இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் அதிகரித்தது. அவரது அறிவுறுத்தலின்பேரில், மருத்துவச் சேவைக்கான ஹெலி காப்டர்களை மாலத்தீவில் இயக்கி வந்த இந்திய ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர்.
இந்நிலையில், சமீப காலமாக மாலத்தீவு நிதி ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந் தது. இதைத் தொடர்ந்து. இந்தியா வுடனும் அதிபர் முய்சு...














