Home 2024
Yearly Archives: 2024
புதுக்கடை: தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவரது மனைவி மினி மோள் ( 28). இவர்களுக்கு கடந்த 27 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் மினிமோளிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து கடந்து 2008 ஆம் ஆண்டு மினி மோள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் சுரேஷ், மாமனார் அர்ஜுனன் (70) உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,...
ராமபுரம் மாதா குருசடி சேதம்: ஊர் மக்கள் மனு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமபுரம் புனித புனித கார்மல் அன்னை மகிமை ஊர் வளர்ச்சி மற்றும் நிர்வாக கமிட்டி செயலாளர் ஜோசப் ராஜேந்திரன் தலைமையில் ஊர் பொதுமக்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், "எங்கள் ஊரில் அமைந்துள்ள குருசடியை சிலர் மத கலவரத்தை தூண்டும் வகையில் சேதப்படுத்தி உள்ளனர்.
கண்ணாடியை உடைத்து மாதா சொரூபத்தையும் மோசமாக சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் ஊர்மக்கள் மன வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை...
நாகர்கோவிலில் மரச்சாமான்கள் விற்பனை கடையில் திடீர் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின். இவர் வைத்தியநாதபுரம் பகுதியில் பழைய மரச்சாமான்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவரது கடையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு மரச்சாமான்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுனர். சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,699 கோடி முதலீட்டுக்கான 14 திட்டங்களுக்கு ஒப்புதல்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.38,698.80 கோடி மதிப்பிலான 14 முதலீட்டு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதி, தொழில் உள்ளிட்ட துறைகளின் செயலர்கள், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர். பல்வேறு...
சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் சட்டக்கல்வி அளிக்கும் புதிய திட்டம் தொடக்கம்
சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த அவர்களுக்கு ஆன்லைனில் சிறப்புசட்டக்கல்வி அளிக்கும் புதிய திட்டத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், சுரானா அண்ட் சுரானா சர்வதேச சட்ட மையத்துடன் இணைந்து சீர்மிகுசிறப்பு சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு சட்டக்கல்வி தொடர்பான ஆன்லைன் சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்க உள்ளது. இந்த புதிய கல்வித் திட்டத்தின் தொடக்கவிழா சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதில்...
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை கிண்டி, அரிமா சங்க லேபர் காலனி பகுதியில் அரிமா சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமை நேற்று நடத்தின. இதனை தொடங்கிவைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதேபோல், டெங்கு இறப்புகளும் படிப்படியாக குறைந்துள்ளன. நடப்பாண்டில் தற்போது வரை...
தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏன்? – ஆர்டிஐ பதிலில் மத்திய அரசு விளக்கம்
தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இந்த விளக்கத்தை தந்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக் ஷா) இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிதியை...
நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் திடீர் சாவு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ ராமன்புதூர் தட்டான்விளையை சேர்ந்தவர் விமல் வெங்கடேஷ் (வயது 32), செல்போன் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நோய் பாதிப்பு காரணமாக கடந்த 17-9-2024 அன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்கள் சிகிச்சை பெற்ற அவரை, பின்னர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விமல் வெங்கடேஷ் நேற்று முன்தினம் மாலை டிஸ் சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.
இதையடுத்து...
நாகர்கோவிலில் புகையிலை விற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் நேற்று டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு டீ கடையில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடை உரிமையாளரான பார்வதிபுரத்தில் வசித்து வரும் சாஜகான் (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 31 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மேலபெருவிளையை சேர்ந்த ராஜன் (51) என்பவரது கடையில்...
பேச்சிப்பாறை: அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவிடத்தில் மரியாதை
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையை கட்டிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இன்ஜினியர் அலெக்சாண்டர் மிஞ்சின் முதன்மை செயற்பொறியாளராக பணியாற்றினார். அணையை சிறப்பாக கட்டியதால் அவர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர். இவர் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மலேரியா காய்ச்சல் காரணமாக இறந்தார். இவர் நினைவிடம் பேச்சிபாறை அணை அருகில் உள்ளது.
அலெக்ஸாண்டர் மிஞ்சினுக்கு 157வது பிறந்த தினம் நேற்று (8-ம் தேதி) கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது நினைவிடத்தில் பொதுப்பணி துறையினர், விவசாயிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பொதுப்பணித்துறை சார்பில் செயற்பொறியாளர்...













