Google search engine
Home 2024

Yearly Archives: 2024

திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல்: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறறம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் நடமாட்டம், பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் ஸ்டாலினின் திமுக அரசைக்கண்டித்து அக்.8-ம் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி, குனியமுத்தூர்...

தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி என நிர்பந்திப்பதா? – அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை வழங்குவோம் என்று கூறி தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மத்தியஅரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு (எஸ்.எஸ்.ஏ.) வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 165 கோடியைவழங்குவோம் என்று கூறி...

பாமக தலைவர் அன்புமணி பிறந்த நாள்: பிரதமர் மோடி, கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பாமக தலைவர் அன்புமணி தனது 56-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு பிரதமர்மோடி, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி: அமிர்த காலத்தின்போது புகழ்பெற்ற, வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் நோக்கில் நாம் முன்னேறி செல்கிறோம். தேசத்தை முன்னேற்ற பாதையில், புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதில் உங்களது தொடர்ச்சியான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழகத்தின் வளர்ச்சிக்கு சமரசமின்றி தொடர்ந்து குரல் கொடுத்து...

இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகளால் முள்ளிவாய்க்காலில் பதுக்கிய ஆயுதங்களை தேடும் இலங்கை ராணுவம்

ராமேசுவரம்: இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், நீதிமன்ற அனுமதியுடன் அந்நாட்டு ராணுவத்தினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின்னரும், தமிழ்ப் போராளிகள் புதைத்துவைத்த ஆயுதக் குவியல்களை அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தேடி, அழித்து வருகிறது. தமிழகத்திலும் இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்கள் விட்டுச்சென்ற ஆயுதக் குவியல் முதன்முறையாக கடந்த 2014 ஆகஸ்ட் 28-ம் தேதி சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள...

மலேசிய நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: குற்றாலம் வந்த மலேசியா எம்.பி. பிரபாகரன் தகவல்

தென்காசி: மலேசிய எம்.பி. பிரபாகரன், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மலேசியாவில் இந்தியர்களின்நலனுக்காக உருவாக்கப்பட்ட `மித்ரா' என்ற சிறப்புக் குழு பிரதிநிதியாக, மலேசியப் பிரதமர் என்னைநியமித்துள்ளார். ரூ.10 கோடி நிதி ஒதுக்கி, மலேசியாவில் உள்ள 20 லட்சம் இந்தியர்களுக்கான பொருளாதார மற்றும் மறுமலர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதுதான் இந்த துறையின் நோக்கம். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமுடன், சில மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்து, இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தோம். சர்வதேச வர்த்தகம், திட்டங்கள் குறித்து அவரிடம் பேசினோம். கடந்த 7 ஆண்டுகளாக மலேசியாவில் இருந்து...

ஓசூர் பகுதியில் சாமந்திப்பூ அறுவடை தீவிரம்: பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக மலர் சாகுபடிஅதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக, சாமந்திப் பூ, செண்டுமல்லி, பட்டன் ரோஜா உள்ளிட்டவை அதிகம் சாகுபடியாகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர் மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூருவுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும். நடப்புஆண்டு பருவ மழை கைகொடுத்ததால் சாமந்திப்பூக்கள் அதிக அளவில் விளைந்தன. இதனால், விநாயகர் சதுர்த்தியின்போது உரிய விலை கிடைக்கவில்லை. இதனிடையே, நாளை (அக். 11)ஆயுத பூஜை, சரஸ்வதி...

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ரூ.3.6 கோடியில் உருவ சிலைகள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை: தென்காசி, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்ரூ.3.6 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, எத்தலப்பர் நாயக்கர், வீராங்கனை குயிலி ஆகியோரின் உருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்ட செய்திக் குறிப்பு:2023-24-ம் ஆண்டுக்கான செய்திமக்கள் தொடர்புத்துறை மானியக்கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவல்...

‘பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளம்’ – ரத்தன் டாடா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த நிலையில், “இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.” என்று அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன்...

மார்த்தாண்டம்: கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்கள் கைது

நட்டாலம் 4 வழிச்சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை  போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்கள் மூன்று பேரையும் மார்த்தாண்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் ஒருவர் கேரள மாநிலம் துறையூர் பகுதியை சேர்ந்த...

இரணியல்: ஆட்டோ டிரைவரை குத்தி பணம் பறிப்பு – 3 ஆண்டு சிறை

மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் (40). இவர் மார்த்தாண்டத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாசம் 18ஆம் தேதி இரவு அங்கு வந்த குளச்சல் பகுதி சேர்ந்த கவாஸ்கர்(24) என்பவர் குளச்சல் செல்ல வேண்டும் என சவாரிக்கு அழைத்துள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, குறும்பனை பகுதியில் வைத்து கவாஸ்கர் ஆட்டோவை நிறுத்தி மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சந்திரனிடம் பணம் மற்றும் செல்போன்களை தருமாறு மிரட்டி, கத்தியால் குத்தி விட்டு அவரது...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...