நவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு, பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வது பாரம்பரிய வழக்கம்.
இதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் இன்று (30ம் தேதி) காலை சுசிந்திரம் கோயிலில் இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், எம்ஆர் காந்தி எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.