95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஓசி – ஒடிசா அணிகள் மோதின.
இதில் ஐஓசி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சுமித் குமார் (18-வது நிமிடம்), ரகுநாத் (28-வது நிமிடம்), குஜிந்தர் சிங் (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. இந்திய ராணுவ அணி தரப்பில் கவுரவ் பக்தனி, அக்சய் துபே, சந்தன் மிந்த் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.