கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் பகுதிக்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அவைகளை பார்வையிடுவதற்காக தேரூரில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கோபுரம் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்