குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது

0
47

குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல் ஆனந்தகுழி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். முன்னதாக, இவர் கன்னியாகுமரியில் வசித்தபோது, பக்கத்துத் தெருவை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி நண்பரானார்.

அதன்படையில் அவரது வீட்டுக்கு ஜார்ஜ் அடிக்கடி சென்று வருவது வழக்கமாம். அப்போது, நண்பரின் மனைவிக்கும் ஜார்ஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கன்னியாகுமரியில் தனியாக, தனது 14 வயது மகளுடன் வசித்த ஜார்ஜ் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பரில் அச்சிறுமிக்கும் ஜார்ஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து ஜார்ஜை போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here