ஈத்தாமொழி அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் கைது

0
400

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 42), தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் பாதை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு அய்யப்பன் தனது நண்பரான மங்கலவிளையைச் சேர்ந்த விஜயன் (32) என்பவருடன் சேர்ந்து வின்சென்ட் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். 

அப்போது சத்தம் கேட்டு வந்த வின்சென்டின் மனைவியையும் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து வின்சென்ட் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கிய அய்யப்பன், விஜயன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here