பாடல் கொடுத்த தலைப்பு! – டி.அந்தோணி பகிர்வு

0
17

திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து நாயகனாகவும் அறிமுகமாகும் புதுமுகத் திறமைகளின் வரிசையில் டி.அந்தோணி, தன்னுடைய குறும்படத்தையே ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்கிற தலைப்பில் உருவாக்கியிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டில் படத்தின் கதை பற்றிக் கூறும்போது: “கொல்கத்தாவிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் மது என்கிற பெண்ணும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழும் பணக்கார இளைஞன் கார்த்திக்கும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறார்கள்.

சந்திப்பின் முடிவில் மீண்டும் சந்திக்கவே கூடாது என்று சொல்லிச் செல்கிறார்கள். ஆனால், சென்னை வாழ்க்கை அவர்களை மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கிறது. சந்திப்புகளால் அவர்களின் இருண்ட உலகங்களின் ரகசியம் வெளிப்பட்டபடி கதை பயணிக்கும். அந்த இருளில் முகிழ்க்கும் வெளிச்சம்தான் படம்” என்றார்.

அசோக் ஸ்ரீதரன் இசையில் கார்த்திக் நேத்தா எழுதிய ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்று இப்படத்துக்காக எழுதிய ஒரு பாடலின் வரியையே தலைப்பாக வைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here