ரஜினி​யின் ‘தர்மன்’ படத்தில் ஸ்ரேயா!

0
15

நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெ​யிலர் 2’ திரைப்படம் அக்​டோபர் மாதம் வெளி​யாக இருக்​கிறது. இந்தப்படத்​தின் முதல் பாடல் சமீபத்​தில் வெளியாகி வரவேற்பைப் பெற்​றது.

அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்​படத்​துக்கு பிறகு அஸ்​வத் மாரி​முத்து இயக்​கும் ‘தர்மன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கி​யுள்​ளது.

இதையொட்டி நடிகை ஸ்ரேயா, ரஜினியுடன் இருக்​கும் புகைப் படத்தை சமூகவலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டு, ‘ஹாப்பிடே’ என கூறி​யுள்​ளார். இதனால் அவர் இப்​படத்​தில் முக்​கிய கதாபாத்திரத்தில் நடிப்​ப​தாகக் கூறப்படு​கிறது. சிறப்பு பாடல் ஒன்​றுக்கு நடனம் ஆட இருப்​பதாகவும் தெரி​கிறது. ஸ்ரே​யா, ‘சிவாஜி’ படத்​தில் ரஜினி ஜோடியாக நடித்​திருந்​தார். அப்படம் வெளி​யாகி 19 ஆண்​டுக்குப் பிறகு மீண்​டும் அவருடன் இணைந்துள்​ள​தாகக் கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here