செப்.1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதா? – மறுபரிசீலனை செய்ய பெப்சி கோரிக்கை

0
23

திரைப்பட படப்​பிடிப்​பு​கள் உள்​ளிட்ட அனைத்து திரைப்​படப் பணி​களை​யும் செப். 1 முதல் நிறுத்​தும் முடிவை மறு​பரிசீலனை செய்​யு​மாறு தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துக்கு பெப்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

‘செப். 1 முதல் வெளி​யாகும் திரைப்​படங்​களை, 8 வாரம் கழித்​துத் தான் ஓடிடி-​யில் வெளி​யிடு​வோம் என தயாரிப்​பாளர்​கள் கடிதம் கொடுத்​தால் தான், அந்த படங்​களைத் திரை​யிட அனு​ம​திக்க முடி​யும்’ என்று தமிழ்​நாடு திரையரங்கு உரிமை​யாளர்​கள் சங்​கம் மற்​றும் விநி​யோகஸ்​தர்​கள் சங்கக் கூட்​டமைப்பு முடி​வெடுத்​துள்​ளது.

இதைக் கண்​டித்து தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​க​மும் நடப்பு தயாரிப்​பாளர் சங்​க​மும் இணைந்து செப். 1 முதல் படப்​பிடிப்​பு​கள் உள்​ளிட்ட அனைத்து பணி​களும் நிறுத்​தப்​படும் என்று அறி​வித்​தது.

இந்த முடிவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்று தென்னிந்​திய திரைப்​படத் தொழிலா​ளர்கள் சம்மேளனம் (பெப்​சி) வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. இதுபற்றி பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: படப்​பிடிப்​பு​கள் நிறுத்​தப்​படும் போது, அதன் நேரடி பாதிப்பு தயாரிப்​பாளர்​களுக்கு மட்​டுமல்ல; தினசரி வேலை​வாய்ப்பை நம்பி வாழும் ஆயிரக்​கணக்​கான திரைப்​படத் தொழிலா​ளர்களுக்​கும் அவர்​களது குடும்​பங்​களுக்​கும் ஏற்​படு​கிறது.

திரைப்​படத் தொழில் என்பது தயாரிப்​பாளர்​கள், நடிகர்​கள், இயக்குநர்​கள் ஆகியோரை மட்​டுமே சார்ந்​தது அல்ல. பல்​வேறு பிரிவு​களைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கான தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரம் இந்​தத் துறை​யுடன் இணைந்​துள்​ளது.

எனவே, தயாரிப்​பாளர் சங்​கம் அறி​வித்​துள்ள, செப். 1 முதல் படப்​பிடிப்​பு​கள் உள்​ளிட்ட அனைத்து திரைப்​படப் பணி​களை​யும் நிறுத்​தும் முடிவை மறு​பரிசீலனை செய்​யு​மாறு பெப்சி சார்​பில் கேட்​டுக்​கொள்​கிறோம்.

இந்​தப் பிரச்​சினை​யில் அரசு உடனடி​யாகத் தலை​யிட்​டு, தயாரிப்​பாளர் சங்​கம், திரையரங்க உரிமை​யாளர்​கள் சங்​கம் மற்​றும் தொழிலா​ளர் அமைப்​பு​களின் பிர​தி​நி​தி​களை ஒருங்​கிணைத்​து, அரசின் முன்​னிலை​யில் முத்​தரப்பு பேச்​சு​வார்த்​தையை நடத்த வேண்டும் என்​றும் கேட்​டுக்​கொள்​கிறோம். இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யின் போது தற்​போது சினி​மா​வில் உள்ள எல்லா பிரச்​சினை​களை​யும் பற்றி பேசி முடிவு எடுத்து விட்​டால், திரைப்​படத் துறை இன்​னும் வேக​மாக செயல்பட அது உதவும்.

திரைப்​படத் துறையைப் பற்​றி​யும், திரைப்​படத் தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரம் பற்​றி​யும் நன்கு அறிந்த தற்​போதைய முதல்​வர் விஜய், இந்​தப் பிரச்​சினை​யின் தீவிரத்​தை​யும், திரைப்​படப் பணி​கள் நிறுத்​தப்​படு​வ​தால் தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரம்​ ​பா​திக்​கப்​படும்​ என்​ப​தை​யும்​ கருத்​தில்​ கொண்​டு, உரிய நடவடிக்​கை எடுக்​கவேண்​டும்​ என்​று கேட்​டுக்​கொள்​கிறோம்​. இவ்​​வாறு ஆர்​.கே.செல்​வமணி கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here