சுயசரிதை எழுதுகிறார் ரஜினிகாந்த்: சவுந்தர்யா தகவல்

0
22

ரஜினி​காந்த் தனது சுயசரிதையை எழுதும் பணி​யில் தீவிரமாக ஈடு​பட்டு வரு​வ​தாக அவரது மகளும் தயாரிப்​பாள​ரு​மான சவுந்​தர்யா ரஜினி​காந்த் தெரி​வித்​துள்​ளார்.

ரஜினி​காந்த் தற்​போது ‘ஜெ​யிலர் 2’ படத்தை முடித்​துள்​ளார். நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்தை அடுத்து ‘தர்​மன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் சிம்​ரன், ராஷி கன்னா உள்பட பலர் நடிக்​கின்​றனர். இந்​நிலை​யில் ரஜினி​காந்த் தனது சுயசரிதையை எழுதி வரு​வ​தாக அவர் மகள் சவுந்​தர்யா ரஜினி​காந்த் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “அப்பா தனது சுயசரிதையை எழுதி வரு​கிறார். அந்​தப் பணி​யில் நானும் நெருக்​க​மாக ஈடு​பட்​டுள்​ளேன். அந்​தப் புத்​தகம் வெளி​யாகும் நாளை ஆவலுடன் எதிர்​பார்க்​கிறேன். மக்​கள் மீண்​டும் மீண்​டும் வாசிக்​கக்​கூடிய, உத்​வேகம் பெறக்​கூடிய அரிய படைப்​பு​களில் ஒன்​றாக அந்த புத்​தகம் இருக்​கும் என்று நம்​பு​கிறேன்.

பரமஹம்ச யோகானந்​தரின் ‘ஆட்​டோபயோகி​ராபி ஆஃப் எ யோகி’ புத்​தகத்தைப் ​போன்ற முக்​கி​யத்​து​வத்தை அப்​பா​வின் சுயசரிதை​யும் பெறும் என்று நம்​பு​கிறேன். ஏனென்​றால் அவரது வாழ்க்​கைப் பயணம் உண்​மை​யிலேயே மிக​வும் தனித்​து​வ​மானது. சரி​யான நேரம் வரும்​போது, அவரது வாழ்க்​கைக் கதை திரைப்​பட​மாக உரு​வாக்​கப்​பட்​டால், தனிப்​பட்ட முறை​யிலும் தொழில்​ரீ​தி​யாக​வும் நான் மேற்​கொள்​ளக்​கூடிய சிறப்​பான படமாக அது இருக்​கும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

பேருந்து நடத்​துந​ராக வாழ்க்​கை​யைத் தொடங்​கிய ரஜினி​காந்த், திரை​யுல​கில் ஆரம்ப காலத்​தில் சந்​தித்த போராட்​டங்​கள், அவரது வளர்ச்​சி, முக்​கிய​மான திரைப்​படங்​கள் உள்​ளிட்ட திரை​யுலக அனுபவங்​கள் மற்​றும் அரசி​யல் தலை​வர்​களு​டன் அவருக்கு இருந்த நெருக்​கம் உள்பட பல்​வேறு விஷ​யங்​கள் அவரது சுயசரிதை​யில் இடம்​பெறும் என்று கூறப்​படு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here