‘அரசன்’ படத்துக்​காக தரமணியில் பிரம்மாண்ட​ அரங்கு

0
16

வெற்றிமாறன் இயக்​கத்​தில் சிலம்பரசன் டிஆர் ஹீரோ​வாக நடித்து வரும் படம், ‘அரசன்’. ‘வடசென்​னை’ சினி​மாடிக் யுனிவர்​ஸாக உரு​வாகும் இதில் விஜய் சேதுபதி முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். அமீர், சமுத்​திரக்​க​னி, கிஷோர், ஆண்ட்​ரியா உள்​ளிட்​டோர் நடிக்​கின்​றனர். அனிருத் இசையமைக்​கும் இப்​படத்தை வி கிரியேஷன்ஸ் சார்​பில் கலைப்​புலி எஸ்​.​தாணு தயாரிக்​கிறார்.

இந்​தப் படத்​துக்​குச் சென்னை கிழக்கு கடற்​கரைச் சாலை பகுதியில் வட சென்னை செட் அமைத்து படப்​பிடிப்பு நடைபெற்றது. இந்​நிலை​யில் சென்னை தரமணி​யில் புதிய அரங்கு அமைத்து இப்​போது படப்​பிடிப்பை நடத்தி வரு​கின்​றனர்.

படப்​பிடிப்பு தளத்​தில் சிலம்பரசன், வெற்றிமாறன், அனிருத் ஆகியோர் சந்​தித்​து, படத்​தின் பணி​கள் குறித்து கலந்​துரை​யாடிய புகைப்​படம் சமூக வலை​தளத்​தில் வைரலாகி வரு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here