காலையில் திருமணம் மாலையில் பிரிந்தனர் – மதுபோதையில் புதுப்பெண், மாமனாரை தாக்கிய புதுமாப்பிள்ளை

0
22
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமணப் பெண்ணையும் அவரது தந்தையையும் புதுமாப்பிள்ளை தாக்கியதாகப் புகார்.
ரீத்தாபுரத்தில் திருமண வரவேற்பின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாகப் புதுப்பெண்ணும் அவரது தந்தையும் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கன்னியாகுமரி, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை திடீரென்று புதுப்பெண்ணையும், அவரது தந்தையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் 31 வயது ராணுவ வீரர். இவர் குமரி-கேரளம் எல்லை பகுதியான பாறசாலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இளம்பெண் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார்.

திருமண வரவேற்பு

ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் இரு வீட்டார் சம்மதத்துடன் ராணுவ வீரருக்கும், இளம்பெண்ணுக்கும் பாறசாலையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மாலையில் திருமண வரவேற்பு விழா மணமகனின் ஊரான ரீத்தாபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

போலீசில் புகார்

அப்போது மதுபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை புதுப்பெண்ணின் தந்தையிடம் வம்பிழுத்து அவரிடம் தகராறு செய்ததோடு தகாத வார்த்தைகள் பேசி அவரையும், புதுப்பெண்ணையும் தாக்கிவிட்டு ஓடி விட்டார். புதுமாப்பிள்ளை தாக்கியதில் காயம் அடைந்த புதுப்பெண் மற்றும் அவரது தந்தை இருவரும் இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் கொடுத்தனர்.

இரவில் பிரிந்தனர்

பின்னர் இரவோடு இரவாக புதுப்பெண்ணை அவரது தந்தை தனது வீட்டிற்கே அழைத்து சென்றார். இதனால் காலையில் திருமண விழாவில் இணைந்த காதல் ஜோடி மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பிரிந்து சென்றது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here