குழித்துறையில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

0
21
குழித்துறை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
குழித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிடுவது, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது, தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் செவிலியா்கள், பேரூராட்சி ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் விளவங்கோடு வட்டக் கிளை தலைவா் சுந்தா் சிங் தலைமை வகித்தாா். அனுரா நெல்சன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் கனகராஜ் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் மைக்கேல் ராஜ் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here